மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Share Button

தமிழக சட்டப்பேரவையில் 21 இடங்கள் காலி இடங்களாக உள்ளன. திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம்,  அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் குறித்து தேர்தல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளதால் அதனை தவிர்த்து மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம்  அறிவித்தது.

இந்த நிலையில் மேற்கண்ட மூன்று தொகுதிகள் தொடர்பாக திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா? 3 என்பது இன்றைய விசாரணையையடுத்து தெரிய வரும்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *