அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு நல வாரியம் அமைத்துத் தரக்கோரி தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் மனு
சென்னை :-
அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்கம் சார்பில் மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் C.V. கணேசன் அவர்களை சந்தித்து கட்டிடத் தொழிலாளர்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு தனி நல வாரியம் அமைத்துத் தரக்கோரி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கை அடைங்கிய மனுவை மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் C.V.கணேசன் அவர்களிடம் வழங்கப்பட்டது. அந்த கோரிக்கை மனுவை ஏற்று முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் தெரிவித்தார்.
இந்த சீரிய முயற்சிக்கு உறுதுணையாக இருந்த மாநில தலைவர் R.V.பால்ராஜ் மற்றும் மாநில பொதுச்செயலாளர் V.மதிமாறன் மாநில பொருளாளர் J.சுரேஷ்பாபு மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் சார்பிலும் மற்றும் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்கம் சார்பில் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் மாநிலத்தலைவர் R.V.பால்ராஜ்.
அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்கம் (523/2020)
அரும்பாக்கம், சென்னை.
(மாநில நிர்வாக குழு)
Leave a Reply