நாகர்கோவில் பாரா மெடிக்கல் கல்லூரி ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கல்லூரி நிறுவனர் கைது செய்யப்பட்டார்.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக பெண் இணை இயக்குநர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். பாலியல் தொல்லை கொடுத்த ரவி நாகர்கோவிலை அடுத்த இறைச்சக்குளத்தில் அமைந்துள்ளது ஜேக்கப் பாரா மெடிக்கல்.
இங்கு சுமார் 80 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 10 பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்தக் கல்லூரியின் நிறுவனர் ரவி. இவர் இரண்டு பெண் ஊழியர்களின் துணையோடு ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ரவி தனது அறைக்கு ஓர் ஆசிரியையை அழைத்து, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ரவியின் அறையிலிருந்து கலங்கிய கண்களுடன் அந்த ஆசிரியை வெளியே வந்துள்ளார்.
இதைக் கவனித்த மாணவிகள் ஏன் அழுகிறீர்கள் என ஆசிரியரிடம் கேட்டுள்ளனர். மேலும் இதுபற்றி அந்த ஆசிரியரின் பெற்றோரிடமும் மாணவிகள் கூறியுள்ளனர். பெற்றோர் விசாரித்ததில் ரவியின் பாலியல் தொல்லை விவகாரம் அம்பலமாகியுள்ளது.
இதையடுத்து அந்த ஆசிரியை பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆசிரியைகள், மாணவிகளை ஏ.எஸ்.பி. ஜவகர் தலைமையில் காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் கல்லூரியில் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கல்லூரி நிர்வாகி ரவி கைது செய்யப்பட்டார். மேலும் ரவிக்கு உதவியதாக கல்லூரியின் இணை இயக்குநர்கள் நளினி, கலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கல்லூரியில் ஒரு சில மாணவிகளும், சில ஆசிரியைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Leave a Reply