வேதம் என்றால் என்ன? அறிந்து கொள்ள விழைகிறேன்?

Share Button

கேள்வி : வேதம் என்றால் என்ன? அறிந்து கொள்ள விழைகிறேன்?

பதில் : எனக்குத் தெரிந்தவரை விளக்க முயற்சிக்கிறேன். நான் பண்டிதனில்லாதாகையால், ஆகமப் ப்ரமாணமாய் இதைத் தருகிறேன். இறைவனை அறிந்துகொள்ள நமக்கு, வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் என பல வகையாய் நம் பெரியோர்கள் வகுத்துள்ளனர்.

வேதத்தை எளிமைப்படுத்தி ஆகமமும், அதன் எளிமையாய் புராணமும், மிகவும் எளிமையாய் மேலும் இதிகாசமுமாய் இன்று நம் கைகளில் உள்ளது. வேதங்கள் அனைத்தும் சப்த விடயம், பொருள் கொள்ள புறப்பட்டோமாகில், மிக ஆழ்ந்த புலமை வேண்டும், இல்லையெனில் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். இன்று நம் கைகளில் இருக்கும் அனைத்தும் மிகவும் பிழை பட்டிருக்கிறது.

சுருக்கமாக, ரிக் வேதம் = பிரஞ்ஞானம் பிரம்மம் (இயற்கை தெய்வங்களை வணகுவதன் மூலம், ப்ரஹ்மத்தை அனைத்திலும் காணும் வழியை சொல்வது) யஜுர் வேதம் = அகம் ப்ரஹ்மாஸ்மி (வெளியில் இருக்கும் ப்ரம்மம், நமக்குள்ளும் இருப்பதை அறிய வழி சொல்வது) சாம வேதம் = தத்வமஸி (நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் எனும் தத்துவத்தை, பாடல்களின் மூலம் உணரச் செய்யும் வழிமுறையைக் கொண்டுள்ளது.)

அதர்வண வேதம் = மேல் சொன்ன வேதங்களின் சாராம்சத்தை, சிற்றின்ப பலனுக்காகச் செய்யும் வழிமுறைகளைக் கூறும் ஒரு வேதம்.

 

 

ஸ்ரீலஸ்ரீ ஷண்முகம் சுவாமிகள்,
காஞ்சிபுரம்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *