வாயுத்தொல்லையா? நீங்க ஒரு எளிய வழி இதோ!
சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் உணவு செரிமாணம் ஆகும் போது அங்கு பல இராசயன மாற்றங்கள் ஏற்பட்டு வாயுக்கள் உருவாகும். இதில் பெரும்பாலும் நைட்ரஜன் வாயு தான் இருக்கும். அதனுடன் ஆக்ஜிஸன், கார்பன் டை ஆக்சைடு, ஹைட்ரஜன் போன்ற வாயுக்கள் கலந்திருக்கும்.
இந்த வாயுக்கள் ஆசனவாய் வழியாக வெளியேறும் போது நாற்றமடிக்காது. ஆனால் அதோடு அம்மோனியா மற்றும் சல்பேட்டுகள் சேரும்போது நாற்றம் வரும். இதைத்தான் வாயுத்தொல்லை என்பர். இந்த வாயுத் தொல்லையால் சில நேரங்களில் மலச்சிக்கல், வயிறு உப்பிசம் ஏற்படும். இந்த பிரச்சினை வயதானவர்களுக்கு அதிகமாக ஏற்படும்.
இதற்கு மருத்துவ மேதை, ஜட்ஜ் திரு.பலராம ஐயர் கருவேப்பிலை சூரணம் கொண்டு நிவாரணம் பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கருவேப்பிலை சூரணம் செய்முறை:
1. காய்ந்த கருவேப்பிலை,
2. சுண்டை வற்றல்,
3. ஓமம்,
4. கசாகசா,
5. சுக்கு.
இவைகளை சம அளவு எடுத்து நெய் விட்டு தனித்தனியாக வறுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும். காலை, இரவு உணவுக்கு முன் அரை டீஸ்பூன் வெந்நீரோடு எடுத்து கொண்டால் நாற்றமடிக்கும் வாயுத்தொல்லை நீங்கும்.
செரிமாணமின்மை, நெஞ்செரிச்சல், அடிக்கடி மலம் கழித்தல், வயிற்று கடுப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்களும் இதை எடுக்கலாம்.
நலம் வாழ,
ஈஸ்வரி
Leave a Reply