“வாத்தி” என்று படத்திற்கு பெயர் வைப்பதும் “வாத்தி கம்மிங்” என்று பாடல் வரிகளை எழுதுவதும் தற்போது பேஷன் ஆகிவிட்டது!
“வாத்தி” என்று படத்திற்கு பெயர் வைப்பதும் “வாத்தி கம்மிங்” என்று பாடல் வரிகளை எழுதுவதும் தற்போது பேஷன் ஆகிவிட்டது.
ஆசிரியர்களை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை இதுபோன்று கேவலப்படுத்தாமல் இருந்தால் நல்லது முன்னணி நடிகர்களும் இது போன்ற விஷயங்களுக்கு ஒத்துக்கொண்டு நடிப்பதால் தான் இயக்குனர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு பெயரையும் பாடலையும் உருவாக்குகிறார்கள்.
சமுதாயத்தில் அனைவராலும் மதிக்கக் கூடிய இடத்தில் இருக்கும் ஆசிரியர் சமுதாயத்தை வாத்தி என்று ஒருமையில் பெயர் வைத்து படம் எடுத்து அதை பிரபலமாக்குகிறார்கள்.
இதேபோன்று மற்ற தொழிலின் பெயரையும் வைத்து படம் எடுத்தால் அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா?
உதாரணத்திற்கு என்னால் ஒரு சில தொழில்களை இங்கே பெயரை சுட்டிக் காட்ட முடியும் நாகரீகம் கருதி அதனை இங்கே குறிப்பிடாமல் இருக்கிறேன்.
மனிதனை விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுத்துகின்ற அந்த ஆறாம் அறிவினை பட்டை தீட்டுகின்ற ஆசிரியர்களுக்கு இந்த சமுதாயம் கொடுக்கிற நன்றி கடன் இதுதான்.
படத்தின் பெயரை வைத்து எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்காதீர்கள் படத்தில் ஆசிரியர்களை உயர்வாக காட்டி இருப்பார்கள் என்று ஒரு சிலர் இங்கே வந்து கம்பு சுற்றுவார்கள்.
ஒரு ஹோட்டலில் சாப்பாடு சுகாதாரமாகவும், சுவையாகவும் சமைத்து பரிமாறிவிட்டு அந்த ஓட்டலுக்கு பெயர் “மலம்” என்று வைத்தால் அது நன்றாகவா இருக்கும்.
– சரவெடி சரவணன்
Leave a Reply