இறைவனிடம் பொருளை வேண்டி செல்லாதீர்கள், அருளை மட்டுமே வேண்டி செல்லுங்கள்!
அன்பானவர்களே!
நம்மை படைத்த இறைவன் நாம் வாழ்வதற்கு தேவையான பணம், பொன், பொருள், சொத்து, சுகம் அனைத்தையும் கொடுத்துள்ளார்.
ஆனால் ஞானத்தை மட்டும் கொடுக்கவில்லை அதை மறை பொருளாகவும், அதை தேடு பொருளாகவும் இறைவன் வைத்துள்ளார்.
நாம் இறைவனை வணங்கினாலும், இறைவனை வணங்காவிட்டாலும், கோவிலுக்கு சென்றாலும், கோவிலுக்கு செல்லாவிட்டாலும், இறைவனிடம் பொன் பொருள் காசு பணம் சொத்து சுகம் பட்டம் பதவி நோய்நொடி வறுமை வசதிவாய்ப்பு மனஅமைதி மனஅமைதி இன்மை போன்றவற்றை கேட்டு இறைவனை வேண்டினாலும், வேண்டாவிட்டாலும் மனிதனாக பிறந்த அனைவருக்கும் அவரர் கருமவினைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு தேவைப்படும் அனைத்தையும் தேவையான நேரத்தில் கண்டிப்பாக இறைவன் கொடுப்பார் அதேபோல் தேவைப்படும் நேரத்தில் கண்டிப்பாக எடுப்பார்.
ஆனால் ஞானத்தை மட்டும் இறைவனிடம் கேட்காமல், வேண்டாமல், தேடாமல் கொடுக்க மாட்டார்.
நாம் அனைவரும் கோவிலுக்கு செல்வது, தேவாலயத்துக்கு செல்வது, மசூதிக்கு செல்வது, இறைவனை பிராத்தனை செய்வது அனைத்தும் நீண்ட ஆயுள் பொன்பொருள் காசு பணம் சொத்து சுகம் கிடைப்பதற்கும், பட்டம் பதவி வசதிவாய்ப்பு பெருகுவதற்க்கும், நோய் நொடி நீங்குவதற்கும் மட்டுமே.
ஆனால் இவை அனைத்தையும் நீங்கள் இறைவனிடம் கேட்டாலும் கேட்காவிட்டால் கண்டிப்பாக கொடுத்து விடுவார். அதேசமயம் எடுத்தும் விடுவார்.
ஆனால் இறைவன் எதிர்பார்ப்பதெல்லாம் பொன் பொருள் பதவி வசதி வாய்ப்பை வேண்டி என்னை தேடி வர மாட்டார்களா???… என்பதல்ல.
இறைவன் நினைப்பதெல்லாம் ஞானத்தை தேடி, ஞானத்தை கேட்டு, ஞானத்தை வேண்டி என்னிடம் வரமட்டார்களா???… என்று மட்டுமே.
எனவே இறைவனிடம் பொருளை வேண்டி செல்லாதீர்கள். இறைவனிடம் அருளை மட்டுமே வேண்டி செல்லுங்கள்.
குருவே இறைவன்… குருவே எல்லாம்…. ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு பகவான் திருநீறு சித்தர் சுப்பையா சுவாமிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்…. குருவின் சீடன்.
Leave a Reply