ராணிப்பேட்டை மாவட்ட சிறுபான்மை நலத்துறை நலக்குழு உறுப்பினராக கோவி.பார்த்திபன் தேர்வு!
அரக்கோணம், ராணிப்பேட்டை மாவட்டம் :-
மாவட்ட சிறுபான்மை நலத்துறை நலக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள அரக்கோணம் கோவி.பார்த்திபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிறுபான்மையின் நலத் நலத்துறையின் சார்பாக ராணிப்பேட்டை மாவட்ட சிறுபான்மை நலக்குழு உறுப்பினராக, அரக்கோணம் பௌத்த இயக்க அறக்கட்டளை பொதுச்செயலாளர் கோவி.பார்த்திபன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இப்பொறுப்பினை வழங்கிய தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம் சென்னா அவர்களின் பரிந்துரையின் பேரில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மாண்புமிகு மஸ்தான் அவர்களுக்கும் துணி நூல் துறை அமைச்சர் மாண்புமிகு ஆர். காந்தி அவர்களுக்கும், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திருமிகு. பாஸ்கர பாண்டியன் அவர்களுக்கும் சிறுபான்மை நலத்துறை மாவட்ட நல அலுவலர் திரு. முரளி அவர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கோவி.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை நலத்துறையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் போன்று சிறுபான்மை சமூகங்களில் பௌத்த சமூகத்தின் பிரதிநிதியாக அரக்கோணம் கோவி.பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரக்கோணத்தில் வசிக்கும் கோவி.பார்த்திபன் அவர்கள் B.E., M.Sc., (யோகா)., (L.L.B.,) படித்துள்ளார். பள்ளிப்பருவத்திலிருந்தே பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் கொள்கையின் அடிப்படையில் பௌத்தம் குறித்தான விழிப்புணர்வு நன்கு கற்றவர் பெற்றவர்.
கௌதம புத்தர் குறித்தான வரலாற்று பதிவுகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற முழு முயற்சியுடன் பௌத்த இயக்க அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் பவுத்தம் சம்பந்தமான வரலாற்று பதிவுகளை, பௌத்தம் எழுகிறது என்ற சிறப்பு மலர்களை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறார்.
இந்த வெளியீட்டின் மூலம் பௌத்த வரலாற்றையும், பாபாசாகேப் அம்பேத்கரின் வரலாற்று சிந்தனைகளையும் தொடர்ந்து நூல் வடிவிலே கொண்டு வந்து மக்களுகளின் பயன்பாட்டுக்கு தந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மாவட்டமாக பௌத்த உபாசகர்களை பௌத்த சிந்தனையாளர்களையும் கண்டறிந்து அவர்கள் மூலம் தொடர்பு கொண்டு பௌத்த விகார்களை கட்டமைப்பதிலும் பௌத்தம் சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் அதற்கு ஆதரவையும் ஆலோசனைகளையும் உதவிகளையும் தொடர்ந்து செய்துவருகிறார் கோவி.பார்த்திபன் அவர்கள்.
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவையின் பொருளாளராக நியமிக்கப்பட்டு செயலாற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல், மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளையின் செயலாளராகவும் பௌத்த இயக்க அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்படுகிறார்.
இதன் மூலம் நூற்றுக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறார். படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவிதொகையாக லட்சக்கணக்கான ரூபாய்கள் வழங்குவதற்கான காரணமாகவும் செயலாற்றி வருகிறார்.
இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடுஅரசு சிறுபான்மை நலத்துறை மூலம் வழங்கப்பட்டு வரும் பல்வேறு நல திட்டங்களை சிறுபான்மை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் மாவட்ட நலக்குழு உறுப்பினராய் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
Leave a Reply