மனவலிமையும் உடற்பயிற்சியும் நமக்கான பாதுகாப்பு!
மனவலிமையும் உடற்பயிற்சியும் நமக்கான பாதுகாப்பு; போக்குவரத்து காவலர் வினோத்குமார் உடன் சிறப்பு நேர்காணல்!
புதுவரவு புதுப்பொலிவுடன் புதுவிதமான சாதனை மனிதர்களை புத்துயிர் தரும் விதமாக களம் காண வைப்பதில் முன்னோடியாக விளங்கி வருகின்றது என்றே சொல்லலாம்…!
அந்த வகையில் திருப்பூரில் போக்குவரத்து காவலரின் வித்யாசமான சாகச பயணமும் பயிற்சியைப் பற்றியும் அறிவோம் வாங்க…
சார் வணக்கம்! நம்ம மதுரை மண்ணுக்கும் மதுரை மீனாட்சிக்கும் தனித்துவமான மகிமை உண்டு என்பார்கள். அதே போன்று உங்களைப் பற்றி எங்களது புதுவரவு மாத இதழில் பதிவிட வந்துள்ளோம்.
சார் எனது சொந்த ஊர் மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த டி புதுப்பட்டி கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். எனது தந்தை பெயர் கோபாலகிருஷ்ணன். தாய் பெயர் கலாபாண்டி. எனது பெயர் கோ.வினோத்குமார், வயது 35. எனது மனைவி பெயர் அருணா ஜோதி. மகன் அபிமன்யு.
2013-ல் தமிழ்நாடு காவல்துறையில் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு காவல் படை பிரிவில் 4 வருட காலமும், பின் ஒரு வருடம் சென்னை பெருநகர ஆயுதப்படையிலும், 4 வருட காலமாக திருப்பூர் மாநகரிலும் போக்குவரத்து காவலர் பணியில் பணிபுரிந்து வருகின்றேன்.
நான் சிறு வயதில் இருந்து சுறுசுறுப்பாகவும், மிடுக்காகவும் துடுக்காகவுமே திகழ்வேன். அப்பப்ப பலர் விளையாடும் போது எனது சிந்தனை மற்றும் தேடல்கள் சற்று மாறுபட்டே இருக்கும் என்கிறார் வினோத்குமார்.
தனித்துவமாக தனது உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்திடும் விதமாக திருப்பூரில் ரைடர்ஸ் கிளப் மற்றும் உடற்கட்டு ஆர்வலர் மத்தியில் இப்பெயரை அறிந்திடாதவர்கள் எவரும் இருக்க முடியாது என்கிறார் வினோத்குமார்.
தற்போது திருப்பூரில் போக்குவரத்து காவலர் பணி புரிந்து வரும் தனது பணிக்கு உடற்கட்டு மிகவும் அவசியம் என்பதால் இப்போது 3 வருட காலமாக சைக்கிளிங் பயிற்சி செய்து வருகின்றார்.
நேரம் கிடைக்கின்ற போது தொடர் சைக்கிளிங் தொலை தூர கிலோ மீட்டரையும் நாளுக்கு நாள் தனது வேகத்தை கூட்டி, ஆரம்பத்தில் 10, 15, 20 என ஆரம்பித்து தற்போது 40 கிலோ மீட்டர் மற்றும் 60 கிலோ மீட்டர் வரை சைக்கிள் ஓட்டி வருகின்றார்.
காவலர் பணிக்கு சென்று விட்டு ஓய்வு நேரங்களில் உடற்பயிற்சியினை இடை விடாது செய்து வருவது வழக்கம்.
மிடுக்கான தோற்றம் கொண்ட இவர் மல்யுத்த வீரர்களை நினைவு படுத்திடும் இரும்பு போன்ற இவரது கைகள் பெஞ்ச் பிரஸ்சில் 115 கிலோ எடை தூக்குவதிலும், டெட்லிப்ட் 200 கிலோவை மிக அசாத்தியமாக தூக்கும் வல்லமை படைத்த இரும்பு மனிதராகவும் பலர் கூறி வறுவதை காண்கின்றோம்.
எனது உத்வேகமும் உணர்வும் வருவதற்கான இளைஞர்களின் கனவு நாயகர் அப்துல் கலாம் அவர்களினாலும், தமிழக காவல் துறை இயக்குனர் உயர் திரு.சைலேந்திரபாபு IPS அவர்கள், மற்றும் உயர் திரு .திருநாவுகரசு IPS ஆகியோர்களை முன் மாதிரியாகக் கொண்டே பல உடல் திறமைக்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன்.
அவ்வப்போது எனது போக்குவரத்து காவலர் பணிக்கான சேவைப்பணியினையும் தொடர்ந்து செயலாற்றி வருகிறார் போக்குவரத்து காவலர் வினோத்குமார்.
இப்பணியை நான் முழு மனதோடு ஏற்றுக் கொண்டு காவலர் பணியை செய்து வருகிறேன். எனக்கான உடல் பாதுக்காப்பினை உறுதி படுத்திடும் வகையில் பணி புரியும் போது பல இடங்களில் நோய்த் தொற்று பல்வேறு விதங்களில் பரவிடக் கூடலாம்.
போக்குவரத்துப் பணியின் போது வாகனங்களில் இருந்து அசுத்தமான புகைகள், அசுத்தக் காற்று வீசி மண் துகள்கள் பறந்து வந்து நம் உடலில் படுவதால் சிறு வயதிலையே நோய்த் தொற்றுக்கு ஆளாகி பலவித உடல் உபாதைகளும் எங்கள் காவல் துறையில் பணிபுரிவோருக்கு உள்ளாகிறது.
இதனை தடுக்கும் விதமாகவே நான் எனது உடலை அன்றாடம் உடற்கட்டு, சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு வருவதால் தனக்கான உடல் ஆரோக்கியம் பெற்றிடவும், இது தன்னிகரில்லா அனைத்து காவலர்களின் உயிரையும் உடலையும் பாதுகாத்திடும் விழிப்புணர்வு பதிவாகவும் நான் கருதுகின்றேன் என்கின்றார் போக்குவரத்து காவலர் வினோத்குமார்.
இதனால், நம் உடலும் உயிரும் வலிமை பெற்று நல்ல நிலை பெறும் என்ற தன்னம்பிக்கை ஊட்டி வருகிறார் காவலர் பணியில்.
வினோத்குமாரின் காவலர் பணியும் மகத்தானது. இவரது உடற்கட்டு பயிற்சி என்பது இவருக்கு மட்டுமில்லிங்க தன்னுடன் பணிபுரியும் ஒட்டு மொத்த காவலர்களுக்கும் இப்பயிற்சி என்பது பொருந்தக்கூடிய ஒன்று என்று பெருமிதத்துடன் கூறிகிறார் வினோத்குமார்.
இப்படிப்பட்ட இந்த சாதனை மனிதருக்கு புதுவரவு மாத இதழின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நல்ல சமூக அக்கறையுள்ள போக்குவரத்து காவலர் வினோத்குமார் அவர்களை இதை படித்துக் கொண்டிருக்கும் நீங்களும் இவரை வாழ்த்தி, பாராட்டி மகிழலாமே!
தொடர்புக்கு : 8072946085 / 9498115140
Leave a Reply