பிரபல திரைப்பட நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார்

Share Button

சாலிகிராமம், சென்னை :-

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த பிரபல திரைப்பட நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் நேற்று இரவு 12.30 மணிக்கு அவரது வீட்டில் காலமானார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

”ஊர்க்காவலன்”, ”பொண்டாட்டி ராஜ்ஜியம்” உட்பட 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரசித்து பெற்றவர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ”சேரன் பாண்டியன்” படத்தில் நடிகர் சரத்குமாருக்கு தங்கையாக நல்லெண்ணெய் சித்ரா நடித்துள்ளார்.

நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததால் அவர் பிரபலமனார். ஆகவே, அவர் நல்லெண்ணெய் சித்ரா என அழைக்கப்பட்டார்.

நடிகை சித்ராவிற்கு ஸ்ருதி என்ற மகள் உள்ளார். அவரது உடல் இன்று மாலை 5.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவித்துள்ளார்கள்.

நடிகை சித்ராவின் மறைவிற்கு நடிகை, நடிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். நடிகை சித்ராவின் மறைவு திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.