ஓணம் பண்டிகைக்கு தலா ரூ.1000 பரிசு கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
திருவனந்தபுரம் :-
ஓணம் பண்டிகைக்கு தலா ரூ.1000 பரிசு கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவலையும் தாண்டி கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ்நாடு, சென்னை, கோயம்பத்தூர் போன்ற நகரங்களிலும் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடி மகிழ்வது வழக்கமாக கொண்டுள்ளார்கள் கேரள மக்கள். ஓணம் பண்டிகை களைகட்டியுள்ள நிலையில், 15 லட்சம் குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் பரிசு அறிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி ஓணம் பண்டிகை கொண்டாட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பொது இடங்களில் அதிகம் கூடாமல் வீடுகளில் பண்டிகை கொண்டாட கேரளா மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஓணம் பரிசுத்தொகை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விநியோகம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்திற்காக கேரள அரசு 147 கோடியே 83 லட்சம் ரூபாயை நிதியாக ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஓணம் பண்டிகை நாள் வாழ்த்துக்களை முக்கிய பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர்.