உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் காலமானார்

Share Button

லக்னோ :-

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் காலமானார். அவருக்கு வயது 89. உடல்நலக் குறைவு காரணமாக லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தொற்று பாதிப்பு ஏற்பட்டு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுவந்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மருத்துவமனையின் சிறுநீரகவியல், இதயவியல், நரம்பியல், எண்டோகிரைனாலஜி மற்றும் நியூரோ-ஓட்டாலஜி துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் குழுவினர் தொடர் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழிந்தார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது உத்தரபிரதேச முதல்வராக இருந்தவர் கல்யாண்சிங் என்பது குறிப்பிடத்தக்கது. இராஜஸ்தான் இமாச்சலப் பிரதேச ஆளுநர் ஆகவும் அவர் இருந்துள்ளார்.

கல்யாண் சிங் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.