குலாப் புயல் உருவாகிறது, இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
டெல்லி :-
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையை கடக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணாக காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும். புதிதாக உருவாகும் புயலுக்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் பெயர் வைக்கப்படுகிறது. வடமேற்கு திசையை நோக்கி நகரும் புயல் ஒடிசா, ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Leave a Reply