டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு கரூர் கண்மணி ஆசிரியை தேர்வு
கரூர் :-
டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு கரூர் கண்மணி ஆசிரியை தேர்வு
இவ்வாண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு என்னை தேர்வு செய்த கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கும், மாநில தேர்வு குழுவுக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும், விருது வழங்கி சிறப்பித்த கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், எனது மாநில மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இவ்விருதினை பெற உதவியாக இருந்த என்னை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கும், எனது குடும்ப உறுப்பினர்களுக்கும், எனது உற்றார் உறவினர்களுக்கும், நான் பெற்ற எனது குழந்தை செல்வங்களுக்கும், பெற்றெடுக்காத மாணவச் செல்வங்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், நண்பர்களுக்கும், என்னுடன் பணியாற்றிய, பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் நான் பணியாற்றிய, தற்போது பணியாற்றும் பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஊர் பொது மக்களுக்கும், நன்கொடையாளர் களுக்கும், கரூர் வைசியா வங்கிக்கும் (KVB) எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனது பள்ளியின் வளர்ச்சியினை இவ்வுலகுக்கு வெளிக்காட்டிய பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆசிரியை கரூர் கண்மணி.
Leave a Reply