9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்துமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு
சென்னை :-
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்துமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு.
தமிழ்நாட்டில் பெரிய மாவட்டங்களாக இருந்த நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டமும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டும், வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களும் புதிதாக உருவாக்கப்பட்டன.
இந்த 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அப்போது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்துமாறு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.
இதனையடுத்து விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்றன. கடந்த 31-ந்தேதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
வாக்காளர் பட்டியலை https://tnsec.tn.nic.in என்ற மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.