சத்தீஸ்கரில் தற்போது எம்.பி.க்களாக உள்ள 10 பேருக்கும் மக்களவை தேர்தலில் சீட் வழங்குவதில்லை என பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.
புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும், தற்போது எம்.பி.க்களாக உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்றும் பா.ஜ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பா.ஜ.க. சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசிடம் தோல்வி அடைந்தது ஆட்சியை இழந்தது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 11 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் 11, 18 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
Leave a Reply