வைகோ மகன் துரை வைகோவிற்கு ம.தி.மு.க.வில் பதவி

Share Button

சென்னை :-

ரகசிய வாக்கெடுப்பில் துரை வையாபுரிக்குபதவி

சென்னையில் இன்று (20-10-2021) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துரை வைகோவுக்கு பதவி வழங்குவது தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ம.தி.மு.க.,வின் பொதுச்செயலாளராக இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு அக்கட்சியில் பதவி வழங்குவது தொடர்பாக நடந்த ரகசிய வாக்கெடுப்பில் துரை வையாபுரி (எ) துரை வைகோவிற்கு ம.தி.மு.க.,வில் தலைமை கழக செயலாளர் பொறுப்பு வழங்க முடிவு செய்ததாக வைகோ தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பில் 106 வாக்குகளில் துரை வையாபுரிக்கு 104 வாக்குகள் பதிவானது. மேலும் ம.தி.மு.க.,வில் வைகோவிற்கு பதவி வழங்கப்பட்டது. வாரிசு அரசியல் இல்லை எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.