உலக கோப்பை 2-வது ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி

Share Button

துபாய் :-

பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றுக்கு தரவரிசைப்பட்டியலில் டாப் 8-ல் இடம் பெற்ற அணிகள் நேரடியாக தகுதி பெற்றது. மீதமுள்ள 4 இடங்களுக்கு முதல் கட்டமாக போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட திட்டமிட்டு இருந்தது அதன் படி இங்கிலாந்திற்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இன்று (20-10-2021) நடைபெற்ற இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரீட்சை

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவருக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் (57) ரன்களும், க்ளென் மேக்ஸ்வெல் (37) ரன்களும் எடுத்தனர்,

பின்னர் தொடர்ந்து ஆடிய இந்திய அணி 17.5 ஓவர் ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்திய அணியைப் பொறுத்தவரை ரோகித் சர்மா (60) ரன்களும் சூர்யகுமார் யாதவ் (38) ரன்களும் எடுத்தனர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.