வாகா எல்லையில் ராணுவதினருடன் நடிகர் அஜித்
அமிர்தசரஸ் :-
நிறைவடைந்த வலிமை படப்பிடிப்பு
அஜித் ரசிகர்கள் இடையே வலிமை படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. வலிமை பட ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் நடிகர் அஜித் தனது பைக்கில் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
பைக் பிரியரான நடிகர் அஜித் தனது பைக்கில் அடிக்கடி நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பார்.
அதன்படி, டெல்லியில் உள்ள தாஜ்மஹாலுக்கு சென்ற நடிகர் அஜித் அதன் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் எல்லையான பஞ்சாப் மாநிலம் வாகா சென்ற அஜித் அங்கு எல்லை பாதுகாப்பு படையினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
வாகா எல்லையில் ராணுவதினருடன் நடிகர் அஜித்
வைரல் ஆகும் புகைப்படம்
இந்நிலையில் வாகா எல்லையில் தேசிய கொடியை கையில் பிடித்தவாறு அவர் புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.
ட்விட்டரில் தல அஜித் என்ற ஹாஸ் டேக்கும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Leave a Reply