கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் “திருக்குறள் கருத்து விளக்க ஓவியங்கள்” நூலை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ்.பிரபாகர் இ.ஆ.ப. அவர்கள் வெளியிட, தேவராஜ் குழும தலைவர் திரு.தே.மதியழகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
கிருட்டினகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் கிருட்டினகிரி அன்பு ஆர்ட்ஸ் அகெடமி, ஓவிய பயிற்சியின் வாயிலாக 2015-ல் 133 மாணவிகளைக் கொண்டு, ஏழு மணி நேரத்தில் 1330 திருக்குறள்களுக்கு வர்ணத்தில் கருத்து விளக்க ஓவியங்கள் வரைய செய்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.
மாணவிகள் வரைந்த திருக்குறள் கருத்து ஓவியங்கள் தொகுப்பு நூலை, கிருட்டினகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரபாகர் அவர்கள் வெளியிட கிருட்டினகிரி ஐவிடிபி பிரான்சிஸ், தொழிலதிபர் மதியழகன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.
இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர், தமிழ் பேராசிரியை திருமதி கீதா, காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கண்ணன் மற்றும் ஆசிரியைகள் உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
Leave a Reply