கஜா புயலானது கடந்த நவம்பர் 2018ல் கிழக்கு கடற்கரையோரம் இருக்கின்ற சிற்றூர்கள், கிராமங்கள், சிறு நகரங்களை நிலைகுலையும் அளவிற்கு சூறையாடியதை நாம் அனைவரும் அறிவோம். அதில் குறிப்பாக நான்கு மாவட்டங்களை முழுவதுமாக மீண்டு வர இயலாத அளவிற்கு மிகமோசமான அழிவுச் சம்பவத்தை நிகழ்த்திச் சென்றது.
கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் வீடு, உணவு, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட போன்ற அடிப்படை வசதிகள் இழந்து தவித்தனர். விளைநிலங்கள், கால் நடைகள் என உழவுக் குடிமக்கள் இழந்துள்ளனர், 60 பேர் இந்த புயலில் சிக்கி தங்கள் இன்னுயிரை இழந்தனர்.அரசு கணக்கீட்டின்படி பத்து மில்லியன் தென்னை மரங்கள் சில லட்சம் மற்ற மரங்களும் மீண்டெழ முடியாதவாறு சாய்ந்தது.
இந்த கோரமான சம்பவத்தில் நமது தோழர் ஒளிப்படக்கலைஞர் சேக் உசேன் டெல்டா பகுதிகள் முழுக்க பயணம் செய்து அம்மக்களின் துயரில் கைகொடுத்தார். அதோடு மட்டுமில்லாமல் அந்த மக்களின் வாழ்வாதாரம் அழிந்து போனதையும் கஜா புயலின் கோர தாண்டவத்தையும் தன்னுடைய ஒளிப்படங்களின் மூலம் காட்சிப்படுத்தி வந்துள்ளார்.
அன்பு நண்பர்களே அத்தகைய ஒளிப்படங்களை நம் அனைவரின் முன்னால் ஒளிப்படக் கண்காட்சியாக காட்சிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இதிலிருந்து வரும் தொகையை டெல்டா மாவட்ட மாணவர்களின் கல்விக்காக அளிக்க உள்ளனர். ஆகவே நாம் அனைவரும் பெருமளவு ஆதரவும் உதவிக்கரம் நீட்ட வேண்டுகிறேன்.
கை கோர்ப்போம்… ஆதரிப்போம்…
Leave a Reply