கிருட்டினகிரி மாநகரில் முதல் முறையாக எஸ்.வி.வி.திருமண மண்டபத்தில் புத்தகத் திருவிழா

Share Button
கிருட்டினகிரி மாவட்டம், கிருட்டினகிரி மாநகரில் முதல் முறையாக புதிய பேருந்து நிலையம் எதிரிலுள்ள எஸ்.வி.வி.திருமண மண்டபத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த புத்தகத் திருவிழாவானது 24.12.2018 முதல் 02.01.2019 வரை நடைபெற உள்ளது.
இந்த புத்தகத்திருவிழாவில் லட்சக்கணக்கான புத்தகங்கள், பல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள், ஆயிரக்கணக்கான தலைப்புகளில் வைக்கப்பட்டுள்ளன. தினசரி காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும். தினமும் மாலையில், கலை நிகழ்ச்சிகள், சான்றோர் பெருமக்களின் கருத்தரங்கம், சொற்பொழிவுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.
அனுமதி இலவசம் :
இது முதலாம் ஆண்டு புத்தகத் திருவிழாவாக உள்ளதால் குறைவான வாசகர்களே வந்து செல்கிறார்கள்.
தொடர்ந்து இந்த வருடம் விதைக்கப்பட்ட இந்த விதை மரமாக முளைத்து வளர்ந்து பல்லாண்டுகள் வாழ வேண்டும் என்பதற்காக அதிகப்படியான வாசகர்கள் வந்து கிருட்டினகிரி மாவட்ட புத்தகத் திருவிழாவை வெற்றிபெறச் செய்யவேண்டுமென  பெரியோர்கள்,  மாணவச் செல்வங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். வாருங்கள் நல்ல புத்தகங்களை வாசியுங்கள்.
தொடர்புடைய உங்கள் நண்பர்களிடம் இந்த செய்தியை அனுப்பி வைக்குமாறும் வாசிப்பு பழக்கத்தை அதிகரிகக்கச் செய்யுமாறும் இதன் மூலம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். நமது மாவட்ட  புத்தகத் திருவிழாவை  நாமே வெற்றிபெறச் செய்வோம்.
அன்புடன்,
மாருதி மனோ, கிருஷ்ணகிரி.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *