10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் (20-06-2022) இன்று வெளியீடு : மாணவர்கள் மதிப்பானவர்கள்!

Share Button

10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் (20-06-2022) இன்று வெளியாகி இருக்கின்றன :

கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்குப் பிறகு, இரண்டு ஆண்டுகளாக முழுவதுமாக நடக்காத கற்பித்தலைக் கடந்து, பொதுத்தேர்வு எழுதிய 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

தேர்வு முடிவுகள் எதுவாயினும் முழுமனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள். மாணவர்களின் மகிழ்ச்சியிலும், குழந்தைகளின் கொண்டாட்டங்களிலும் பங்கெடுக்கும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் முடிவுகள் சற்று மாறிவரினும் அவர்களோடு உடனிருங்கள்.

மதிப்பெண்கள் அடுத்த கல்வியைத் தீர்மானிக்கும். ஆனால் அவை மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானித்து விடாது.

மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு, அடுத்து என்ன படிப்பது என்பதற்கு வழிகாட்டும் நாம், மதிப்பெண்களை இழந்த மாணவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்பதற்கும் வழிகாட்டத் தயாராக வேண்டும்.

மாணவர்களை, குழந்தைகளை, மதிப்பெண்களால் அளக்காதீர்கள். மதிப்பெண்களால் துளைக்காதீர்கள்.

மாணவர்கள் மதிப்பானவர்கள். வழிகாட்டுவோம் ஒளியூட்டுவோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

சிகரம்சதிஷ்
எழுத்தாளர்- ஆசிரியர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *