அபிநந்தனும் தமிழ்நாடு; நிர்மலா சீதாராமனும் தமிழ்நாடு: மோடி பெருமிதம்!
பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார்.
முன்னதாக சென்னை முதல் மதுரை வரையிலான தேஜஸ் விரைவு ரயில் சேவையை அவர் தொடக்கி வைத்தார். இதனை தொடர்ந்துக் கன்னியாகுமரியில் பேசிய மோடி, ‘உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா’ என்று பேசத் தொடங்கினார்.
மேலும் மக்கள் விரும்புவது நேர்மையும், பாதுகாப்பையும் தானே தவிர, குடும்ப அரசியலை அல்ல என்றும்
மக்கள் விரும்புவது முன்னேற்றத்தை மட்டுமே; வாக்கு வங்கி அரசியலை அல்ல என்றும் பேசினார். அதுமட்டுமல்லாமல் சில எதிர்க்கட்சிகளின் அறிக்கைகள் பாகிஸ்தானுக்கு உதவி புரிவதாக இருந்ததாக குற்றம் சாட்டிய மோடி, ‘உங்களின் அரசியலை பலப்படுத்த நாட்டை பலவீனப்படுத்தாதீர்கள்’ என்று காட்டமாக கூறினார்.
தொடர்ந்து பேசியவர், ‘நான் இன்று இருப்பேன்; நாளை சென்றுவிடுவேன்; ஆனால் இந்தியா எப்போது இருக்கும்’ என்றும் ‘சிலர் ஊழலை வாழ்க்கை முறையாக கொண்டுள்ளனர்; ஆனால் நான் ஊழலை அனுமதிக்கமாட்டேன்’ என்றும் கூறினார்.
தொடக்கதில் பேசிய மோடி பாகிஸ்தானால் சிறைபிடிக்கபட்ட அபிநந்தனும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமிழ்நாடு என்பதில் பெருமை அடைவதாகக் கூறி பிரதமர் மோடி தனது உரையை முடித்தார்.
Leave a Reply