உடல் நலக்குறைவு காரணமாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்!

Share Button
63 வயதான அவர் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். கோவா முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி வகித்து வந்தார். கணைய  புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவர் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மனோகர் பாரிக்கரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு கடவுள் வலிமையை கொடுக்க வேண்டும். என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தனது நோயை எதிர்த்து ஒரு ஆண்டுக்கும் மேலாக போராடிய அவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் சேவையை வருங்கால சந்ததியினர் நினைவு கூறுவார்கள் அவரது மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களும் அவர்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் மறைவுக்கு மத்திய அமைச்சரவை சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டது.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *