ஆரம்பத்திலேயே தடுக்கா விட்டால் ஆளையே தின்று விடும் : செல்போன் மோகம்

Share Button
திருப்பூர் :
செல்போன் மோகம் : ஆரம்பத்திலேயே தடுக்கா விட்டால் ஆளையே தின்று விடும் இந்த செல்போன்
நான் சும்மா இருந்தாலும் என்னை சும்மா விடமாட்டிங்கிறாங்க இந்த குழந்தைகளும் இளம் தளிர்களும் என்று கதறுகிறது செல்போன்கள். ஒரு காலத்தில் செல்போன் பயன்பாடுகள் மிகமிக குறைவாக இருந்தபோது, செல்போன்களில் தாக்கம் குழந்தைகளை இளம் தளர்களையும் பெரிதும் பாதிக்கவில்லை.
தவிர்க்க முடியாத ஒரு பொருள் செல்போன்
ஆனால், இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக மனிதர்களிடையே ஒட்டிக்கொண்டுள்ளது இந்த செல்போன் என்கின்ற இந்த கருவி.  அலைபேசிக்குள் அகப்பட்டுவிடாமல், காத்துக்கொள்வதும், மனதை அலைபாயவிடாமல் கட்டிப்போட்டு வைப்பதும் நம் கையிலேதான் உள்ளது.
சீரழியும் இளம் தளிர்கள்
வறுமையில், அலைபேசி வாங்கித்தர பணமில்லை. திறமையெங்கோ நம்மில் மறைந்திடுமோ என்று தாயும் தந்தையும் ஒரே போராட்டம் தன் பிள்ளைகள் மீது. தன்னையே அடமானம் வைத்தாவது மொபைல் போனை பிள்ளைகளுக்கு வாங்கித்தந்தாக வேண்டும் என்ற ஆசையில் இன்று பல உயிரிழப்புகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் இன்று நாடு முழுவதும் நடந்துகொண்டு இருக்கிறது.
பெற்றோர்களே உஷார்
செல்போனை வாங்கித்தந்ததால் அறியா வயதென்றில்லாமல் ஆழத்தில் சென்று முத்தெடுப்பது போல, இன்று இளம் தளிர்கள் அலைபேசி மோகத்தால் அதாள பாதாளத்திற்குள் சிக்கித் தவிக்கிறார்கள். கண் முன் தெரியாமல் நாள்ளொன்றிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கண் இமைக்கும் நேரத்தில் நம் குழந்தை செல்வங்களே தன்னைதானே அழித்துக்கொள்ளவும் நேரிடுகிறது இந்த பாழாப்போன செல்பேசியால்.
நம் தாய் தந்தையராகிய நம்மையே அலைய வைத்து விடுகின்றது கவலையில் ஆழ்த்திவிடுகிறது. செல்போன்களில் பல்வேறு விளையாட்டு ஆப்கள் வந்துவிட்டன. ஒருநாள் முழுவதும் செல்போனில் கேம் விளையாட சொன்னாலும் இன்றைய குழந்தைகள் தொய்வின்றி விளையாடும் அளவிற்கு கவர்ச்சிகரமான கேம்கள் வந்துவிட்டன.
இதனால், மன இறுக்கம், மனச்சோர்வு, தன்னம்பிக்கை இழத்தல், படிப்பில் கவனம் செலுத்த முடியாமை ஆகிய பாதிப்புகள் ஏற்பட காரணமாக இருக்கிறது இந்த செல்போன்களில் உள்ள கேம்கள்.
செல்போன் மோகம்
குழந்தைகளையும், மாணவர்களையும் மன அழுத்தத்திலிருந்து காத்திட தமிழக அரசு தக்க நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலையில் இன்றைய பெற்றோர்கள் வழி தெரியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தீர்வு? இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து, மாணவர்களின் நலன் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பதே இச்செய்தியின் நோக்கம்.
ஆரம்பத்திலையே தடுக்கா விட்டால் ஆளையே தின்று விடும் என்பதை மறந்து விடாதீர்கள். நம் பிள்ளைகளை கவனிக்க பெற்றோர்களாகிய நாம் தான் சிறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
சமூக அக்கறையோடு, சமூக ஆர்வலர்,
ந. தெய்வராஜ், திருப்பூர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *