மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் அமெரிக்க அதிபரின் வீட்டோ அதிகாரத்தை ரத்து செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
அதிக செலவு ஏற்படும் என்பதால், இத்திட்டத்திற்காக டிரம்ப் கேட்ட நிதியை ஒதுக்க முடியாது என ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்தனர். இதையடுத்து நாட்டின் தெற்குப் பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் அதிபரின் நிலைப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 182 பேரும், எதிராக 245 பேரும் வாக்களித்தனர்.
இந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ளாத டிரம்ப், அதிபருக்கு உண்டான சிறப்பு வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்தார். இந்நிலையில், அதிபரின் வீட்டோ அதிகாரத்தை அனுமதிப்பதா? வேண்டாமா என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வரும் 26 ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் நான்சி பெலோசி அறிவித்துள்ளார்
Leave a Reply