தொகுப்பூதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்குக் கல்வியாளர் சங்கமம் கோரிக்கை!

Share Button

தொகுப்பூதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்குக் கல்வியாளர் சங்கமம் கோரிக்கை :

இதுதொடர்பாக கல்வியாளர் சங்கமம் அமைப்பின் நிறுவனர் சதிஷ்குமார் பள்ளிக்கல்வி ஆணையருக்கு அனுப்பியுள்ள கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…

பள்ளிக்கல்வித்துறையில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்பாக, தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக ஆசிரியர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களை மாவட்ட அளவில் கணக்கெடுத்தால் நூற்றுக்கணக்கிலும், மாநிலம் முழுவதும் கணக்கெடுத்தால் பல்லாயிரக்கணக்கலும் உபரி ஆசிரியர்கள், அரசின் முழு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக இருக்கும் அத்தனை ஆசிரியர்களையும் உடனடியாக அரசுப் பள்ளிகளுக்கு ஈர்த்துக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுப் பணியில் நீண்ட காலமாக பணியாற்றக்கூடிய ஆசிரியர்களை உடனடியாக பணிக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஆசிரியர்களுடைய கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்கான நியமிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் கடந்த பல ஆண்டுகளாக, புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் Data Entry Operator களாக மட்டுமே பணிபுரியக் கூடிய சூழல் நிலவுகிறது. அவர் அனைவரும் கற்பித்தலில் திறன்மிக்கவர்கள்.

அவர்களைப் பள்ளிப்பணிக்குத் திரும்ப வழிவகை செய்து, பணியிடைப் பயிற்சி வழங்கும் பணியினை முழுநேரமாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிடம் ஒப்படைத்து விடலாம்.

புள்ளிவிபரங்கள் சேகரிப்பிற்கு தொகுப்பூதியத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களை வட்டார வள மையங்களில் நியமனம் செய்துகொள்ள முடியும்.

அரசு இதுகுறித்து நடவடிக்கையை உடனடியாக எடுக்கக் கல்வியாளர் சங்கமம் சார்பில் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *