கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் அவர்கள்  துவக்கி வைத்தார்

Share Button
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் அவர்கள்  துவக்கி வைத்தார். இப்போட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்கில் முதலமைச்சருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டியில் கிருஷ்ணகிரி, ஒசூர், காவேரிப்படடிணம் , ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அரசு மற்றம் தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தொடர் ஓட்ட பந்தயம், கபடி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், நீச்சல், கோகோ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் அவர்கள்  கலந்துக் கொண்டு விளையாட்டுப் போட்டிகளை கொடியசைந்து துவக்கி வைத்தார்.
மேலும் இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகள் அடுத்தது மண்டல அளவில் நடைபெற உள்ள விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர்.
அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் நிரஞ்சன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, மார்கண்டேயன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *