கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் கிருட்டினகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வந்து சேர்ந்தார் 64 அடி உயர கோதண்டராமர்

Share Button
31.01.2019 வியாழக்கிழமை நேற்று ஒரு வழியாக கிருட்டினகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வந்து சேர்ந்தார் 64 அடி உயர கோதண்டராமர்.
கோவிந்தா… கோவிந்தா என்ற கோஷத்துடன் ஒருவழியாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை தொட்டுவிட்டார் கோதண்டராமர்.
திருவண்ணாமலை அடுத்த வந்தவாசி அருகேயுள்ள கொரக்கோட்டையில்  மலையை செதுக்கி 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையை பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நிறுவப்படுகிறது.
அதற்காக ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான கோதண்டராமர் சிலை  வாகனத்தில் கொண்டு செல்ல தயாரானது. இந்த சிலையை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் புறப்பட்டது. எங்கெல்லாம் தடங்கல்கள், இடைஞ்சல்கள் வருகிறதோ அங்கெல்லாம் சிலை நிறுத்தப்பட்டு, இடையூறுகள் சரி செய்யப்படுகின்றன.
வழியில் குறுக்கே வரும் பாலங்கள், கட்டிடங்கள், கடைகள், வீடுகள், ரவுண்டானா என இடித்து அகற்றப்பட்டு பெருமாள் சிலை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வருகிறது. இடைஞ்சல்கள் வரும் இடங்களில் எல்லாம் கோதண்டராமர் சிலை நிறுத்தி வைக்கப்படுகிறது.
பாதைகள் சரி செய்யப்படும் வரை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோதண்டராமரை பார்க்க பக்தர்கள் குவிகின்றனர். பூஜைகளை செய்தும், காணிக்கைகளை செலுத்தியும், செல்பிகளை எடுத்தும் மகிழ்கின்றனர். பிறகு சாலைகள் சீர்செய்யப்பட்டபிறகு, கோதண்டராமரை அந்தந்த பகுதி பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் வழி அனுப்பி வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோதண்டராமர் சிலை கிருஷ்ணகிரி  திருவண்ணாமலை சாலை பைபாஸ்க்கு  நேற்று மாலை வந்து சேர்ந்தது.
ஆனால் அங்குள்ள மேம்பாலம் அருகில் உள்ள தரைப்பாலத்தின் அடியில் ராட்சத தடுப்புகள் அமைக்கும் வேலை நடந்து வந்ததாலும், அப்பணிகள் முடியும் வரையிலும் லாரி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து திருவண்ணாமலை கூட்ரோட்டில் திரண்ட மக்கள் திரண்ட மக்கள் கோவிந்தா கோஷத்துடன் கோதண்டராமரை வழிபட்டு, தேங்காய்களை உடைத்து, கற்பூர தீபாராதனை காட்டினார்கள். இன்று காலை தரைப்பாலத்தின் வேலைகள் முடிந்ததையடுத்து, இன்று காலை  புறப்பட்டு,  பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இணைந்து,  சரியாக 4.15 மணிக்கு கிருட்டினகிரி  சுங்கச்சாவடி வந்து சேர்ந்தது.
சுங்கச்சாவடியில்  ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கோதண்டராமரை தரிசிக்க காத்திருந்து, சிலை வந்ததும் கோதண்டராமரை தரிசித்தனர், தொடர்ந்து சிலை எடுத்துச்செல்லும் வாகனம் சுங்கச்சாவடியை கடந்து பெங்களூரு நோக்கி தன் பயணத்தை தொடர்ந்து சென்றது.
வழி நெடுக ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன்  கோதண்டராமரை தரிசித்து வருகின்றனர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *