கிருஷ்ணகிரி அருகே உள்ள மேகலசின்னம்பள்ளி கிராமத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலைஞர்கள் பெண் குழந்தை பாதுகாப்பது குறித்த கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண் கல்வி அவசியம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மேகலசின்னம்பள்ளி கிராமத்தில் நடைபெற்றது
ஸ்வார்டு தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் சலாலுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கலைநிகழ்ச்சி மூலம் கிராம மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள்.
மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பெண் குழந்தைகளை வீட்டு வேலைகளுக்கு மட்டுமின்றி, ஆடு, மாடுகள் மேய்க்க அனுப்புவதை தவிர்த்து அவர்களை பள்ளிகளுக்கு அனுப்புவேன்டும்.
ஆணுக்கு பெண் சமம் என்ற உரிமைக் கொடுத்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், இளம் வயது திருமணத்தை தவிர்த்து உயர் கல்வி அளிக்க வேண்டும். பெண் குழந்தை பிறப்பதை ஊக்குவிக்க வேண்டும்.
பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கலைஞர்கள் கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலம் கிராம மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள்.
இந்த பெண்பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது ஏராளமான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டனர்.
Leave a Reply