கிருஷ்ணகிரியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கலந்துக் கொண்டு பேசிய கீ.வீரமணி அவர்கள் மாலை நேர பொதுக் கூட்டத்தில் மாணவர்களுக்கு அறிவுரை வகுப்பினை நடத்தியவர் என புகழாரம் சூட்டினார்.
கிருஷ்ணகிரி நகரில் முதல் முறையாக, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஊத்தங்கரை வித்யா மந்திர் கல்லூரி, விதைகள் அமைப்பும் இணைந்து மாபெரும் புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகிறது.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள எஸ்.வி.வி. திருமண மண்டபத்தில் தொடங்கியுள்ள இந்த புத்தகத் திருவிழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து தமிழ் புத்தக நிறுவனங்கள், ஆங்கில புத்தக நிறுவனங்கள், சி.டி-க்கள், குழந்தைகளுக்கான அறிவியல் புத்தகங்கள், நாவல்கள் என 32 அரங்குகள் அமைத்து ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மக்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தக கண்காட்சியினை திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்ட பின் உரையாற்றிய கீ.வீரமணி அவர்கள் பெரிய பெரிய தமிழ் ஆராய்சியாளர்கள் செய்யாத வேலையை வெறும் நான்காம் வகுப்பு வரை படித்த தந்தை பெரியார் தான் தமிழ் எழுத்தில் சீர்திருத்தம் செய்து உலகம் முழுவம் கொண்டு வந்து பள்ளியில் பிள்ளைகளை அடி வாங்குவதை குறைத்தார்.
மேலும் யாரும் சொல்வதையோ, பேசுவதையோ நீ நம்பாதே உன்னுடைய அறிவை நீ நம்பு, பகுத்தறிவு சிந்தனைக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று முழக்கமிட்டவர் தந்தை பெரியார் என்று உரையாற்றிய கீ.வீரமணி அவர்கள் மாலை நேரங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தி அறிவு வகுப்பினை நடத்தியவர் தந்தை பெரியார் என்று கீ.வீரமணி அவர்கள் புகழாரம் சூட்டினார்.
Leave a Reply