ஓசூர் தேர்த்திருவிழா : காவல் துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கை

Share Button
ஓசூரில் நடக்க இருக்கும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு போலீசார் விடுத்துள்ள அறிக்கையில்…
ஓசூரில் வருகின்ற 20ந் தேதி தேர் திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் தங்க ஆபரணம் அதிக அளவில் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாமல் அணிந்து வருபவர்கள் உங்கள் கழுத்தை சுற்றி சேலை அல்லது துப்பட்டா வைத்து தங்க நகைகள் வெளியில் தெரியாத வண்ணம் மறைத்து வர வேண்டும்.
முடிந்த வரை நகைகளை உடையுடன் சேப்ட்டி பின் வைத்து அணிந்து வரவும். குறிப்பாக 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் கழுத்தில் கண்டிப்பாக நகை அணிந்து வருபதை தவிர்க்க வேண்டும். சாமி தரிசனம் செய்யும் போதும் கூட்ட நெரிசல் இருக்கும் இடத்திலும் கவனமாக இருக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை எடுத்து வர வேண்டாம்.
குறிப்பாக கட்டபைகளில் உங்கள் பணப் பை & கைப்பேசி எடுத்து வர வேண்டாம் என்றும் கண்டிப்பாக உங்கள் குழந்தைகள் சட்டை பைகளிலும், குழந்தைகளின் கைகளிலும் உங்கள் விலாசம் அல்லது உங்களை தொடர்பு கொள்ளும் எண் எழுதி வைக்கவும். மேலும் நீங்கள் எடுத்துவரும் வாகனத்தை காவல்துறை சொல்லும் இடங்களில் நிறுத்தி வாகனத்தை பூட்டி விட்டதை உறுதி செய்யவும் என்று  அறிவித்துள்ளனர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *