ஆறாம் அறிவு என்றல் என்ன? மனிதர்களுக்கு மட்டும் தான் இது உண்டா?
கேள்வி : ஆறாம் அறிவு என்றல் என்ன? மனிதர்களுக்கு மட்டும் தான் இது உண்டா?
பதில் : இறைவன், இவ்வுலக உயிரினங்களை ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு, நான்கறிவு, ஐந்தறிவு மற்றும் ஆறறிவு என வகைப்படுத்தி உள்ளான். இங்கு அறிவு என்பது உணர்தலின் விளைவே. எந்த ஒரு உயிரினம் அறிவைப் பெறுவதற்கு ஒரேயொரு கருவியை / புலனைக் கொண்டுள்ளதோ, அது ஓரறிவு உயிரினம் எனப் பொருள்படும்.
உதாரணமாக, தாவர வகையைச் சார்ந்த புல், தனது அறிவை தொடுதல் உணர்ச்சியின் மூலமே பெறுகிறது, இந்த ஒரு உணர்வின் மூலம் அறிவைப் பெறுவதால், அது ஓரறிவு உயிரினமாகும். சில உயிரினங்கள் இரு புலன்களின் மூலம் அறிவைப் பெரும் உயிரினங்கள் ஈரறிவு உயிரனமாகும்.
விலங்குகளுக்கும் மற்றும் மனிதர்களுக்கும் தான் மிக அதிக்கப்படியாக ஐந்து புலன்கள் அறிவைப் பெறுவதற்காக உள்ளன. அப்படியானால், நாமும் விலங்குகளும் ஒன்றா என்கிற கேள்வி வரும். ஆம் என்பதே பொதுவான பதிலாக இருப்பினும், விலங்குகளைக் காட்டிலும் மனிதர்களுக்கு ஐந்து புலன்களால் வரும் அறிவைச் சேமித்து வைக்க உறுப்பில்லாத உறுப்பாகிய மனம் என்கிற ஒரு பொருள் / வஸ்து உண்டு.
இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம். தமிழில் மனிதர்களை உயர்திணையாகவும் விலங்குகளை அஃக்ரினையாகவும் பிரிப்பார்கள். எளிமையாக புரிந்துகொள்ள, அஃறிணை ”அது” விகுதியுடனும், உயர்திணை ”அர்” மற்றும் ”வன்” விகுதியுடனும் வரும். உதாரணமாக, ஆடு வருகிறது / வந்தது, மனிதன் வருகிறான் / வந்தான், அவர் வருவார் என்கிற வாக்கியங்கள் தினையை விளக்கும்.
அப்படியானால், குழந்தை (மனிதன் – உயர்திணை) அழுகும் போதோ இல்லை சிரிக்கும் போதோ ஏன் ”குழந்தை அழுகிறது”, & ”சிரிக்கிறது” என அஃறிணை முடிவைத் தருகிறோம்? உயர்திணை முடிவையல்லவா தரவேண்டும்? இல்லை என்பதே பதில். ஏனெனில், மனம் வளராதவரை, அஃறிணை முடிவே சரி, மனம் வளர்ந்தவுடன் தான் அக்குழந்தை உயர்திணைக்கான தகுதியைப் பெறுகிறது.
மனம் வளரும் / வளர்ந்த குழந்தை சிரிப்பதற்கு பேசுவதற்கும் முயற்சி செய்யும், கூடவே, குழந்தை அழுகிறான், சிரிக்கிறான் என உயர்திணை முடிவைப் பெரும். மனம் வளர்ந்ததாலேயே மனதன் எனப் பெயர் பெற்றவன் பின்பு மனிதன் என பெயர் கொண்டான்.
அப்படியானால், விலங்குகளுக்கு மனம் இல்லையா / வளராத என்கிற கேள்வி வரும். சில விலங்குகளுக்கு மனம் ஓரளவிற்கு வளரும், அவ்விலங்குகளையே நாம் வீட்டு விலங்குகளாக வளர்க்கும் முறையைக் கொண்டிருந்தோம்.
ஸ்ரீலஸ்ரீ ஷண்முகம் சுவாமிகள்,
காஞ்சிபுரம்.
Leave a Reply