மதுரை சிட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுதிலைப் பள்ளியில்: 75ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு 75 வகையான மரக்கன்றுகள் நடும் விழா!
மதுரை :-
மதுரை, சிட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுதிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம், சார்ஜா கிரீன் குளோப் மற்றும் நூல் வனம் சார்பாக 75ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு 75 வகையான மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
கிழக்கு வட்டாரக் கல்வி அலுவலர் ஆர்.எஸ்.எஸ்தர் அவர்கள் தலைமைத் தாங்கினார். அவர் பேசும்போது, “மரம் வளர்க்கும் பழக்கம் இளமையில் இருந்து ஏற்பட வேண்டும். 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்நிகழ்வு சுதந்திரத் தினத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகும்.” என்றார்.
தலைமையாசிரியர் நிரஞ்சனா தேவி அவர்கள் முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் மன்றப் பொறுப்பாளர் சிவராமன் அனைவரையும் வரவேற்றார்.
சார்ஜா கிரீன் குளோப் நிறுவனத்தின் ஜாஸ்மின் அந்நிறுவனத்தின் சார்பாக 75 வகையான மரக்கன்றுகளை குழந்தைகளுக்கு வழங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அவர் பேசும்போது, “சார்ஜா ஒருகாலத்தில் பாலைவனமாக இருந்தது.
இன்று சுற்றுச்சூழல் விழிப்பணர்வு அடைந்து பசுமை நிரம்பி சமவெளி போன்று தோற்றமளிக்கிறது. கிரீன் குளோப் இதுமாதிரியான விழிப்பணர்வைத் தொடர்ந்து சார்ஜாவிலும் இந்தியாவிலும் செய்து வருகின்றது.” என்றார்.
நூல்வனத்தின் நிறுவனர், திருஞானம் துவக்கப்பள்ளித் தலைமையாசிரியர் க.சரவணன் சிறப்புரை ஆற்றும் போது, இந்தியா சுதந்திரம் பெற்று 75 வருடம் ஆகின்றது. பல தலைவர்களின் உயிர் தியாகத்தில், அர்பணிப்பால் பெறப்பட்டது நமது சுதந்திரம் . அதனை நினைவு கூறும் வகையில் 75 வகையான மரக் கன்றுகளை நடும் திட்டம் உருவாக்கப்பட்டது.
பல விதங்களில் சிறப்பாகச் செயல்படும் இப்பள்ளியில் இந்நிகழ்வைச் செய்வதில் பெருமைக் கொள்கிறோம். காந்தியின் சுயசார்புத் தன்மையை நாம் பின்பற்ற வேண்டும். வீடுகளில் பெற்றோருடன் வேலைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அன்றாடப்பாடங்களை காந்தியைப் போன்று அன்றே படிக்க வேண்டும். காய்கறி கழிவுகளை உரமாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் சமையல், பாத்திரங்கள் விளக்கும், குளிக்கும் கழிவு நீர்களை வீணாக்காமல் தோட்டம் அமைத்துப் பயன்படுத்த வேண்டும்.
காந்தி போன்று சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட நேரு, நேதாஜி, பாலகங்காதரதிலகர், கட்டபபொம்மன், வேலு நாச்சியார், திப்பு சுல்தான் போன்றோரின் கதைகளைப் படித்து நாட்டுப்பற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தேசம் காக்க ஒற்றுமையாகச் செயல்படுவோம். சுற்றுச்சூழலை பேணி பாதுகாப்போம் என்றார். ஆசிரியர் ச.சீனிவாசன் நன்றி கூறினார். ஆசிரியர்கள் ப.சுமதி, ஜே.புஷ்பம், இரா.ஸ்ரீ தேவி, எ.இராஜம் கலந்து கொண்டனர்.
Leave a Reply