தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி

Share Button
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவை தெரிவித்து கொண்டேன். மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழகத்தை பாலைவனமாக்கி விட்டது.
மோடி சொல்வதை செய்வதற்கு, தோப்புக்கரணம் போட்டு காத்திருக்கின்றனர் தமிழக ஆட்சியாளர்கள்.
நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதித்துள்ளனர். எழுவர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் தற்போதைய ஆட்சியாளர்கள் விடுதலை செய்யாமல் நாடகமாடுகிறார்கள்.
8 வழிசாலை என்ற பெயரில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது ஆளும் அரசு. ரயில்வே பணிகளில் வட மாநிலத்தவர்களுக்கே வேலை வழங்கப்படுகிறது. மத்திய அரசு பொது நிறுவனங்களில் தொடர்ந்து வெளி மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படுவதை தடுக்கப்பட வேண்டும்.
கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும் திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை என்றவர்கள் இப்போது என்ன செய்திருக்கிறார்கள்?
8 வழிச்சாலைக்காக வழக்குபோட்டது அன்புமணிதானே?. இப்போது அந்த மக்கள் என்ன நினைப்பார்கள்?.
பாஜக சார்பில் ஒரு எம்.பி கூட தமிழகத்தில் வெற்றிபெற கூடாது. அதற்காக ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்வேன்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *