மாணவிகளை தவறாக நடத்திய வழக்கில் அருப்புக்கோட்டை கல்லூரி போராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமின் கிடைத்து 5 நாட்களாகியும் அவர் வெளிவருவதில் தாமதம் நீடிக்கிறது.
சுமார் 11 மாதங்களாக மதுரை மத்திய சிறையில் இருக்கும் நிர்மலா தேவிக்கு கடந்த 12-ம் தேதியே உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஆனால் ஜாமின் கிடைத்து 5 நாட்களாகியும் நிர்மலா தேவியால் சிறையில் இருந்து வெளிவர முடியவில்லை.
ஜாமின் கையெழுத்து போடக்கூடாது என்று அவரது உறவினர்கள் மிரட்டப்படுவதே இதற்கு காரணம் என்று நிர்மலா தேவியின் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
Leave a Reply