கொரோனா பரவலைத் தடுக்க அடுத்த 10 நாட்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என மருத்துவத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்

Share Button
சென்னை :-
அடுத்த 10 நாட்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என மருத்துவத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டு வருகிறது.
தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தொடர்ந்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமெனவும், கொரோனா தொற்று பரவல் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் தொற்று அதிகமாக பரவ வாய்ப்புள்ளதால், நாம் வருகிற 10 நாட்களுக்கு மிகுந்த கவனமுடன் செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். பக்கத்து மாநிலமான கேராளவில் பண்டிகையின் போது கொரோனா தொற்று அதிகமாக பரவியதாக நமக்கு கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது. ஆகவே, தமிழ்நாடடில் கொரோனா தொற்று அதிகரிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்காமல் இருக்க தீவிர நடவடிக்கைகளை நாம் கையாள வேண்டும் என சென்னையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்திருக்கும் மருந்து சேமிப்பு கிடங்கை நேற்று ஆய்வு செய்தபின் இத்தகவலை மருத்துவத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுவரை 63 லட்சத்து 76 ஆயிரம் தடுப்பூசிகள் இந்த மாதத்திற்கு வந்துள்ளன. கூடுதலாக மத்திய அரசு 5 லட்சத்து 89 ஆயிரம் தடுப்பூசிகளை அளித்துள்ளன. மீதமுள்ள 16 லட்சத்து 75 ஆயிரம் தடுப்பூசிகளையும் விரைவில் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்கள் அலட்சியத்துடன் இல்லாமல் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்றும், கட்டாயம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் ஆகியவற்றை பின்பற்றியே ஆகவேண்டும் என மருத்துவத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். 3 வது அலை வந்தாலும் அதை நாம் எதிர்கொள்ளும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிகைக்கைகளை எடுக்க மக்கள் நல்வாழ்வுத் துறை தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.