ஏர்ஹார்ன் (காற்று ஒலிப்பான்) சமூகத்தின் சாபக்கேடு : தமிழக முதல்வரின் உடனடி நடவடிக்கை தேவை

Share Button

இப்பவும் நாகரீக உலகில் வாகனங்கள் பெருகி வரும் சூழலில் தமிழகம் முழுதும் வாகனப்பயன்பாடு அதிக அளவு உள்ளது. இச்சூழ்நிலையில் வாகனங்களில் ஒலி மாசு ஏற்படுத்தும் ஏர்ஹாரன்கள் அதிகளவு பொறுத்தப்பட்டு வாகனங்கள் செல்லும் போது ஒலி எழுப்புவதால் ஒலி மாசு ஏற்பட்டு பொதுமக்களுக்கு செவித்திறன் குறைபாடு, இதய நோய் உள்ளவர்களுக்கு உயிர்போகும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து முந்தைய அரசிடம் ஏற்கனவே பல மனுக்கள் கொடுத்தும் பெரிதாக நடவடிக்கை இல்லை அந்த நேரத்தில் மட்டும் வாகன ஆய்வு செய்யப்பட்டு ஏர்ஹாரன் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு அதே நிலை நீடிக்கிறது. ஏர்ஹாரன் இந்த சமூகத்தின் சாபக்கேடு அதை ஒழிக்க வேண்டியது அரசின் கடமை. அவ்வப்போது வாகன தணிக்கை செய்து பறிமுதல் செய்தாலும் திரும்பவும் ஏர்ஹாரன் பொருத்திவிடுவர் எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இவ்விசயத்தில் உடனடியாக தலையிட்டு தமிழகத்தில் ஏர்ஹாரனுக்கு தடை விதிக்க வேண்டும்.

ஏர்ஹார்ன் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்து அதை பறிமுதல் செய்வதோடு மட்டுமல்லாமல் ஏர்ஹாரன் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு கொடுத்தால் மட்டுமே இது சாத்தியம்.

புதிதாக பதவியேற்றுள்ள இந்த அரசு மூலம் ஏர்ஹார்ன் முற்றிலும் ஒழிக்கப்பட்டது என மக்கள் புகழும் அளவிற்கு இந்த மனுமீது நடவடிக்கை எடுத்து ஏர்ஹாரன் இல்லா தமிழகம் என்ற நிலையை ஏற்படுத்த ஆவண செய்ய வேண்டுமாய் தமிழக மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். நன்றி!

 

 

 

 

 

Sundara Pandian SP

Social Activist

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.