தமிழ்நாடு மாநில அளவிலான நடன சறுக்கு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சாதனை – பயிற்சியாளர் பிரகாஷ் பெருமிதம்
திருப்பூர் :-
தமிழ்நாடு – மாநில அளவிலான நடன சறுக்கு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சாதனை – பயிற்சியாளர் பிரகாஷ் பெருமிதம்.
தமிழ்நாடு மாநில அளவிலான நடன சறுக்கு விளையாட்டுப் போட்டி கடந்த 19 டிசம்பர் 2021 அன்று திருப்பூர் மாவட்டத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு டான்ஸ் ஸ்கேட் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில், தமிழ்நாடு மாநில அளவிலான நடன சறுக்கு விளையாட்டுப் போட்டிகளில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் என 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
பங்கேற்ற அத்தனை மாணவர்களும் தங்களின் தனித்திறமைகளை நிரூபிக்கும் வகையில் தங்களின் அசாத்திய திறமைகளை காண்பித்து பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்.
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் 20 மாணவ மாணவிகள் அடுத்த மாதம் நடக்க உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை பாராட்டி தலைவர்.லயன் எஸ்.தாய் கோயில் சுரேஷ்குமார், தமிழ்நாடு பொதுச்செயலாளர்.கே பூஞ்சோலை மற்றும் இணைச்செயலாளர்.பி. மகேஸ்வரி அவர்களின் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட செயலாளர் & ரோலர் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் பயிற்சியாளர் பிரகாஷ் அவர்களும் இதன் குழு உறுப்பினர்களும் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
Leave a Reply