நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் சண்டை காட்சிக்காக டெல்லி சென்ற விஜய் சென்னை திரும்பினார்

Share Button

சென்னை :-

நடிகர் விஜயின் புதிய திரைப்படமான பீஸ்ட் கடந்த 2 மாதங்களாக சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றுவந்த நிலையில், சண்டைக்காட்சிக்காக படக்குழுவினருடன் நடிகர் விஜய் டெல்லி சென்றார். 5 நாட்கள் அங்கே தங்கி படிப்பிடிப்பு நடைப்பெற்றது.

பீஸ்ட் திரைப்படத்தின் டெல்லி படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் விஜய் சென்னை திரும்பினார். விஜயுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றார்கள். அனிருத் இசையமைக்கிறார்.

திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2 மாதங்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைப்பெற்றது. மேலும், சண்டை காட்சிக்காக படக்குழுவினர் கடந்த வாரம் 5 நாள் பயணமாக டெல்லி சென்றனர்.

அங்கு 5 நாட்கள் தங்கி படப்பிடிப்பு நடைப்பெற்ற நிலையில் தற்பொழுது டெல்லியில் படப்பிடிப்பு நிறைவு செய்துவிட்டு மீண்டும் படக்குழுவினர் சென்னை வந்தடைந்தார்கள்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *