
சென்னை :-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இனி, மின்னலுடன் மழை
வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும் பெய்யும். ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு குளிர்ந்த நிலையில் காணப்பட்டு, ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். பலபகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளது.