டெங்கு ஒழிப்பு பிரச்சார நாடகம் தூமாட்டி ரெங்கசாமி அய்யர் சந்து பகுதியில் நடத்தப்பட்டது்!
மதுரை, கீழச்சந்தைப்பேட்டை , டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளியில் பள்ளித் தலைவர் வே.சுரேந்திரன் பாபு தலைமையில், பள்ளிச் செயலர் சதாசிவம் முன்னிலையில் டெங்கு ஒழிப்பு பிரச்சார நாடகம் தூமாட்டி ரெங்கசாமி அய்யர் சந்து பகுதியில் நடத்தப்பட்டது்.
ஆசிரியர் திருமதி ஓம்சக்தி அனைவரையும் வரவேற்றார். வார்டு எண் 52 ல் சுடலைமுத்துப்பிள்ளை சந்து, குருவிக்காரன் சாலை குப்பம், மாயாண்டியா பிள்ளைத் தெரு, காதர்கான் பட்டலர் தெரு, பள்ளிவாசல் அருகில், இன்று தூமாட்டி ரெங்கசாமி அய்யர் சந்து பகுதியில் துவக்கப் பள்ளி மாணவர்களைக் கொண்டு டெங்கு விழிப்புணர்வு தெரு நாடகம் நடத்தப்பட்டது.
5ம் வகுப்பு கீர்த்திகா, சுஸ்மிதா, பிரியதர்ஷினி, அழகர் சாமி, தருண், முகமது அசன், சு.சந்தோஷ், ந. மணிகண்டன், சார்மிளா , 4 ம் வகுப்பு நாக லெட்சுமி, அமுதஷோபா, ரா, கவி , சஞ்ஜித் கண்ணன் போன்றோர் டெங்கு விழிப்புணர்வு நாடகத்தில் நடித்தனர். இந்த நாடகத்தை எழுதி இயக்கிய தலைமை ஆசிரியர் க.சரவணன் ” மழை நேரங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.
சுற்றுப்புற தூய்மை இன்மையே கொசு பரவக் காரணமாகிறது. மழை நீர் தேங்கும் இடங்களில் டெங்கு புழு வளர ஏதுவாக உள்ளது. எங்கள் பள்ளி மாணவர்கள் கொண்டு தொடர்ந்து ஐந்து வருடங்களாக டெங்கு விழிப்புணர்வு நாடகம் பல பகுதிகளில் நடத்தி வருகின்றோம். பள்ளியானது சமூகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். குழந்தைகள் படிக்கும் போதே சமூகத்திறகு உதவ முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும், கல்வியின் பயன் சமூகம் சார்ந்து இருக்க வேண்டும் என்பதை ஆழமாக மனதில் பதிய வைக்க முயற்சியாக இத்தெரு நாடகம் அமைந்துள்ளது.
மாணவர்கள் நடத்தும் நாடகம் நகைச் சுவையாகவும் பார்வையாளர்களைக் கவரும் விதமாக இருந்ததால் , குழந்தைகள் வலியுறுத்தும் கருத்து பொதுமக்களை எளிதில் சென்றடைகிறது. மாணவர்களுக்கு நாடகம் தன்னம்பிக்கை அளிப்பமுடன், தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்த வாய்ப்ப்ளிக்கிறது். பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் தொடர்ந்து ஆதரவளித்து உற்சாகம் ஊட்டுகின்றனர்” என்றார். பள்ளி துணைத்தலைவர் ஜெயராஜ், பொருளாளர் உதயகுமார் மற்றும் smc உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பாக்ய லெட்சுமி நன்றி கூறினார்.
Leave a Reply