திருவண்ணாமலையை அடுத்த காகாஸ்ரமத்தில் காகபுஜண்டர் தருமலிங்க சுவாமிகள் ஜெயந்தி விழா!

Share Button


திருவண்ணாமலையை அடுத்த காகாஸ்ரமத்தில் காகபுஜண்டர் தருமலிங்க சுவாமிகள் ஜெயந்தி விழாதிருவண்ணாமலை நவ.01திருவண்ணாமலை அடுத்த பெரியகுளம் கிராமத்தில் அமைந்துள்ள காகாஸ்ரமத்தில் காகபுஜண்டர் தருமலிங்க சுவாமிகள் ஜெயந்தி விழா நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டம் பெரியகுளத்தில் காகாஸ்ரமம் ஆதிசக்தி பீடத்தை நிறுவியுள்ள கொல்லிமலை சித்தர் காகபுஜண்டர் ஸ்ரீ தருமலிங்க சுவாமிகளின் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி  காலை மங்கல இசையுடன் விழா துவங்கியது.

உலக நன்மைக்காகவும், இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும், நாடு செழிக்கவும்,  சகல நன்மைகள் பெறவேண்டியும் விநாயகர், வருணபகவான், நவகிரகம், மகாலட்சுமி, ஸ்ரீசொர்ணகால பைரவருக்கு ஹோமம் காகபுஜண்டர் ஸ்ரீதருமலிங்க சுவாமிகள் தலைமையில் நடந்தது.  சிறப்பு பூஜையில் தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து மேல்படூர் அரசு பள்ளிக்கு பிரிண்டர் மற்றும் கம்ப்யூட்டரையும், கீழ்படூர் மற்றும் பெரியகுளம் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறந்த முதல் 3 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் கல்வி பயில்வதற்கான பல்வேறு உபகரணங்களையும் சித்தர் காகபுஜண்டர் ஸ்ரீ தருமலிங்க சுவாமிகள் வழங்கினார்.

பிறகு ஏழை எளியோருக்கு வேட்டி மற்றும் புடவை, சட்டை துணிகளை வழங்கினார். மொத்தம் ரூ.5லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆசிரம வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *