எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று முக்கிய ஆலோசனை
எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி. இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
காணொளி காட்சி வாயிலாக சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதலமைச்சர் தாக்கி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல்காந்தி மல்லிகார்ஜுன ஆகியோர் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டு, மாநில தேர்தல்களில் கூட்டணி வியூகம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.