நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது

Share Button

பெங்களூரு :-

நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலம் இன்று அதிகாலை தொடங்கியது. அவரது உடலுக்கு நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் கண்ணீர் அஞ்சிலி செலுத்தினர்.

நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலம் இன்று அதிகாலை 4.45 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஊர்வலம் செல்லும் வழி முழுவதிலும் ரசிகர்கள், பொதுமக்கள், திரை உலகினர் என அனைவரும் அவரின் ஊர்வலத்தில் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கன்னட திரை உலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் (46) நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்துவிட்டு திரும்பியபோது, மாரடைப்பால் மரணம் அடைந்தார். அங்குள்ள கன்டீரவா மைதானத்தில் அவரது உடல் பொதுமக்கள், ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற புனித் ராஜ்குமார் பல்வேறு வகையில் சமூக சேவைகளும் செய்து வந்துள்ளார். குறிப்பாக ஆதரவற்றவர்களுக்கு இல்லங்கள், முதியோர் காப்பகங்கள், கல்வி நிலையங்கள் என் எண்ணிலடங்கா சேவைகளும் செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மறைந்தாலும், அவர் ரசிகர் மத்தியில் வாழ்வார் என ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

அவரது உடலுக்கு கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல் மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் மந்திரிகள் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், மாநிலம் முழுவதும் இருந்து வந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அம்மாநில அரசு தெரிவித்தது.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.