நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிடும் அமைச்சர் சேகர்பாபு

Share Button

மாமல்லபுரம், செங்கல்பட்டு மாவட்டம் :-

நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிடும் அமைச்சர் சேகர்பாபு

மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் அன்னதானம் சாப்பிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் புகார் கூறியிருந்த நிலையில், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அதே பெண்ணுடன் அமர்ந்து அதே கோயிலில் அன்னதானம் சாப்பிட்டார்.

சில நாட்களுக்கு முன்பு நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் பலரையும் கண்கலங்கச் செய்தது குறிப்பிடத்தக்கது.

மாமல்லபுரம் பகுதியில் மணிகளை விற்பனை செய்து வந்த அந்த பெண் கண்ணீர்விடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருகிறது.

சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இச்செய்தி அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நரிக்குறவர்கள் சமூகத்தைச் சேர்ந்த எங்களால் அந்த இலவச பேருந்தில் பயணிக்க முடியவில்லை என்று கண்ணீருடன் தெரிவிக்கின்றார் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த அஸ்வினி.

பேருந்தை நிறுத்த முயன்றால் பேருந்தை நிறுத்தாமல் செல்கின்றனர். சரி அதைக்கூட விடுங்க… கோயிலில் இலவசமாக அன்னதானம் அளிக்கிறார்கள், மற்றவர்களை போல அன்னதானத்திற்கு நாங்களும் வரிசையில் நின்றால் எங்களை மட்டும் கோயிலை விட்டு வெளியே போங்க என்று அனுப்பிவிடுகிறார்கள்.

அன்னதானம் கொடுக்க மறுக்கிறார்கள். கேள்வி கேட்டால் அடித்து விரட்டுகிறார்கள் என்கிறார் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் அஸ்வினி.

காலம் இப்படியே இருக்காது நாங்களும் வளர்ந்து காட்டுவோம் என மனம் வருந்தும் அந்த பெண் வேதனையுடன் சமூக ஊடகங்களின் தன் கருத்தை பகிர்ந்துள்ளார்.

எங்களை எல்லாம் காலங்காலமாக ஒதுக்கி வைக்கறதால நாங்க ஒதுக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றோமே என வருத்தமளிக்கின்றது என்கிறார் நரிக்குறவர் பெண் அஸ்வினி..!

நாங்க நரிக்குறவர் இன சமூதாயத்தைச் சேர்ந்தவங்க என்பதால என்னவோ மற்ற சமூகத்தினரெல்லாம் எங்கள மிகவும் ஏலனமாகவும் துரோகியாகவும் எங்க மக்கள என்றைக்குமே புறம்தள்ளப்பட்டே பார்க்கின்றாங்க என வார்த்தைக்கு வார்த்தை குமுறுகின்றார் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் அஸ்வினி. பாவங்க கேட்கவே மனம் வலிக்கின்றது.

கடந்த ஒரு வாரத்திற்குமுன் வலைத்தளங்களில் எதேச்சியாக பார்த்தபோது இவங்களுடைய ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.

அப்பத்தாங்க இவங்கள மாதரியுள்ள திறமையுள்ள நரிக்குறவ பெண்கள் இச்சமூகத்திலேயும் இருக்காங்க என எடுத்துக்காட்டுகிறது இச்சம்பவம். ஒட்டுமொத்த சமூகமும் திரும்பி பார்க்க வைத்திருக்கார் இந்த பெண்.

என்னடா இந்த நரிக்குறவர் சமூகத்தச் சேர்ந்த பெண்ணு இப்படி படபடவென பேசுகிறாரே என உலகமே திரும்பிப் பார்கையில தான் இன்றைய திமுக அரசின் இந்து அறநிலையத் துறை அமைச்சரின் பார்வைக்கு இந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் குரல் ஒலித்திருக்கிறது.

அப்படி என்னத்தாங்க இந்த நரிக்குறவ பெண் புதிதாக சொல்லிட்டாங்க என கேட்பீங்க. ஒன்னுமில்லீங்க செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே தலசயன பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

கோயிலுக்கு வரும் ஏழை எளிய பலருக்கும் அன்னதானத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு பசி தீர்த்திடும் வகையில் உணவளிக்கும் பந்தி நடக்குமாம். இந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்களோடு பசிக்கு பந்தியில உட்காரப் போன போது உணவு பரிமாறிட வந்த ஒரு சில நபர்கள் இந்த நரிக்குறவர் சேர்ந்த மக்களை பந்தியில் உட்கார்ந்து சாப்பிட விடாமல் வெளியே போகும்படி விரட்டியுள்ளனர்.

நீங்களெல்லாம் இப்ப உட்காராதீங்க அனைவரும் சாப்பிட்டு விட்டு போன பிறகு மிச்சம் மீதி இருந்தால் சாப்பிடுங்க என கோயிலின் வெளியே போங்க என்று திருப்பி அனுப்பியுள்ளனர்.

காலம் காலமாக எங்க இனத்தை இப்படியே புறந்தள்ளியே வைத்திருக்கிறார்கள் என்று கண்ணீர் விட்டு கதறி இருக்கிறார் அந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண் அஸ்வினி. எங்க இனத்து மக்களின் வாழ்க்கையை இப்படி ஒதுக்கியே விட்டுடாவாங்களோ என கொந்தளித்திருக்கிறார் நரிக்குறவர் பெண் அஸ்வினி.

உடன் வலையத்தள ஒரு சேனலுக்கு பேட்டியளிக்கின்றார். அந்த குரல் இன்று ஒட்டு மொத்த சமூகத்தையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. நாங்க ஊசி பாசி விக்கறவங்க தான் யாரையும் ஏமாற்றி பொய் சொல்லி பிழைக்கலையே சாமி.

நாங்களும் ஊரு விட்டுட்டு ஊர் சென்று ஏதோ வயிற்றுப்பிழைப்பைத் தேடி தொன்று தொட்டு வாழ்ந்து வருகிறோம். எங்க முப்பாட்டன் காலத்தில ஏதோ நவநாகரிகம் இல்லாமலும் சமூகத்தோடு அனுகி வாழாமலும் இடம் விட்டு இடம் நாடோடிகளாய் இருந்திருக்கலாமுங்க.

அட, இப்பத்தான் எல்லாருக்கும் எல்லா சலுகைகளும் வந்திருச்சிங்களே அப்பரம் ஏனுங்க சாமி எங்களை மட்டும் இன்னும் ஒதுக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறீர்கள்.

எங்களுக்கான உரிமைகளையும் எங்க சமூகத்தினருக்குக்கும் புரியும்மளவில் சொல்லுங்க நாங்களும் எங்கள மாத்திக்கின்றோம் சாமியோவ்… இப்ப மட்டும் என்னங்க நாங்க குறஞ்சவங்களா போயிட்டோம். நாங்களும் நல்ல துணிமணி உடுத்துவதில்லையா?, பல் துளக்குவதில்லையா?,குளிப்பதில்லையா?, எங்க சமூகத்தினர் இடையே என்ன குறைவா பாத்துப்புட்டிங்க சாமியோவ்…

நாங்களும் நாளுக்கு நாள் எவ்வளவோ மாறிப்புட்டோங்கோ சாமியோவ். அப்படியிருந்தும் எங்கள இன்னும் இச்சமூகம் ஏனோ ஏளனமாய் பார்கின்றதோ தெரியலை. மாறுமா எங்க நிலை இப்படியே நீடிக்குமோ தெரியல.

எங்ககிட்ட எங்க சமூகத்தினர் படிப்பறிவு இல்லைங்கறதால தானே எங்கேயும் எங்கள கண்டால் வெறுத்தொதுக்கிறீங்க. நாங்களும் எங்க பிள்ளைகள இப்ப கொஞ்சம் கொஞ்சம் படிக்க வைக்கவும் முயற்சி செஞ்சிக்கிட்டுத் தாங்க சாமியோ இருக்காங்க.

அரசு எங்களுக்கான நிரந்தர இடமும், குடியுரிமைச் சான்று வழங்கியும் எங்களுக்கான வகுப்புச் சான்றினை தந்து உதவினால் எங்க நரிக்குறவர் சமூகத்தினர் பழமையை விட்டு விட்டு புதிய வழிகளில் நல்ல ஆளுமைகளாக கல்வி பயின்று இன்று பல சமூகத்தினரைப் போன்றும் வாழ்வில் முன்னேறிடுவோம் என்கிறார் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி.

தற்போதுள்ள தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையைச் சேர்ந்த அமைச்சர் சேகர்பாபு இந்த நரிக்குறவர் பெண்ணின் கோரிக்கையை உடனே சரி செய்து இவர்களுக்கான சலுகைகளையும் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததுள்ளார்.

கோயிலில் உள்ள சமபந்தி விருந்தில் நரிக்குறவர் சமூக மக்களோடு கலந்து கொண்டு அவர்களுடன் அன்னதானம் சாப்பிட்டுள்ளார்.

உங்களுடைய சமூகத்திற்கு நல்ல நல்ல திட்டங்களை நாளடைவில் படிபடியாக செய்துத்தர எங்கள் திமுக அரசு துணை நிற்கும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் வரவேற்கக்கூடிய ஒன்றே.

– ந.தெய்வராஜ்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *