தமிழகத்தில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கூறி சிறு வணிகத்தினை அழித்து விட்டு, அன்னிய முதலீட்டாலர்களுக்கு துணை போகும் தமிழக அரசின் அஜாகப் போக்கினை கண்டித்து, சென்னை தலைமை செயலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக, கிருஷ்ணகிரியில் வணிகர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர் விக்ரமராஜா பேட்டி.
கிருஷ்ணகிரியில் நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில், கிருஷ்ணகிரியில் உள்ள அனுராதா குழுமத்தின் சார்பில் சர்வதேச வேட்டி தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட தமிழ்நாடு வணிகர்கர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், வேஷ்டி என்பது தமிழர் அடையாளம். ஆனால், தற்போது நெசவாளர்களின் தொழில் நசுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அனைத்து மாணவர்கள், அரசு துறை அதிகாரிகள் அனைவரும் வாரம் ஒரு முறை வேஷ்டி அணிய வேண்டும், அதே போல் பெண்கள் கட்டாயம் வாரம் ஒரு முறை நூல் புடவைகள் கட்ட வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கினால், நெசவாளர்களின் வாழ்வில் மீண்டும் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு நல்ல வாய்ப்பு உருவாகும்.
14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு விதித்துள்ள தடைக்கு, வணிகர்கள் ஆதரவு அளித்து வருகிறோம். ஆனால் அரசு துறை அதிகாரிகளில் சிலர், சில்லறை வணிக கடைக்குள் புகுந்து, அரசு அதிகாரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதை ஒழுங்குபடுத்த வேண்டும் என முதல்வர், அமைச்சர், அரசு துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளோம்.
சிறு வியாபாரிகள் அப்பளம், வடகம், ஊருகாய், கடலை மிட்டாய் ஆகியவற்றை பாதுகாக்க பிளாடிக் பயன்படுத்துவார்கள், தமிழகத்தை பொருத்தவரையில் 5 லட்சம் சிறு வனிகர்கள் குடும்பம் உள்ளது.
அவர்கள் வாழ்வாதரம் இது போன்ற காரணங்களால் மிக மோசமாக நிலைக்கு செல்லும்.
மறு சுழற்சி செய்ய கூடிய பிளாஸ்டிக் பொருட்களை விடுத்து, ஒரு முறை கூட பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு, அரசு ஆதரவு கொடுப்பது சிறு வனிகத்தை முடக்கும் விதமாகவும், அன்னிய சக்திக்கு ஆதரவு கொடுக்கும் விதமாகவும் இந்த செயல் அமைந்திருக்கிறது.
அரசின் சட்டத்திற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், கடைக்குள் புகுந்து சில்லறை வணிகத்தை முடக்கினால் எதிர்த்து போராடுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.
தற்போது நடத்த உள்ள கடையடைப்பு போராட்ம் என்பது, மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். பல லட்ச டன் கணக்கில் காய்கறிகள் தேக்கம் அடையும். டீ, பீடி, சிகரெட் கூட கிடைக்காத அளவிலான நிலையை உருவாக்கும். சில்லறை வணிகத்தை முடக்கும் விதமாக பிளாஸ்டிக் தடை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து. நாளை சட்டமன்றத்தை முற்றுகையிட உள்ளோம்.
ஜி.எஸ்.டி வரி விதிப்பு, பண பரிமாற்றம் முடக்கம், சென்னை வெள்ளம் என பல காரணங்களால் எங்களது 40% வணிகம் காணாமல் போய்விட்டது. மீதமுள்ள 60% வணிகம் தான் நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் வர்த்தகம் மூலம் எங்கள் மீது பல முனை தாக்குதல் நடத்தப்படுகின்றது. வியாபாரிகள் நினைத்தால் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியை தர முடியும் என்ற நிலையை உருவாக்குவோம் என தெரிவித்தார்.
Leave a Reply