நானே அனைத்திலும் முதன்மையாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இதற்கு காரணம் என்ன?

Share Button

கேள்வி: நானே அனைத்திலும் (உடை, மதிப்பெண், அழகு, மற்றவர்களால் பாராட்டப்படும் பழக்கவழக்கங்கள், விளையாட்டு உட்பட) முதன்மையாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இதற்கு காரணம் என்ன?

 

 

 

 

 

  • ர. சங்கமித்ரா, ஐந்தாம் வகுப்பு

பதில்: உன்னோட இந்த வயசுல இப்படித்தான் தோணும் சங்கமித்ரா. ஏன்னா, இன்னிக்குவரைக்கும் உன்னோட அப்பா அம்மாவோட presence மட்டுமே நீ அனுபவிக்கற. வெளில யார்க்கிட்டயும் பெரிசா பழகற வாய்ப்பு உனக்கு இல்ல இல்லையா? அதனால உன் family-ல இருக்கிற ஒரு நாலுபேர்ல நீதான் சின்ன பொண்ணா இருப்ப. அதனாலேயே உனக்கு அதிக importance எல்லாரும் குடுப்பாங்க. அதனால உன் மனசுல உனக்கே தெரியாம நான்தான் முதல்ல அப்படின்னு ஒரு எண்ணம் தோணி இருக்கும். அந்த எண்ணம் நீ இப்போ பழகற உங்க school friends-கூட உன்னையே நீ compare பண்ணி பாக்கற ஒரு மன நிலைமைய உனக்குக் கொடுக்கும். இந்த மாதிரி இந்த வயசுல நிறையபேருக்கு தோணும். சிலபேருக்கு அதை நடைமுறைல செய்யறதுக்குண்டான வாய்ப்பும் அமையும். நீ கொஞ்சம் பெரியவளா வளரும்போது இந்த எண்ணம் மாறரதுக்கு வாய்ப்பு இருக்கு அல்லது ஒரு சிலருக்கு இதே மனநிலைமை பெரியவங்களா ஆனதுக்கு அப்புறமும்கூட குறிப்பிட்ட வயசு வரைக்கும் இருக்கும். அதனால இது ஒண்ணும் பெரிய கவலைப்படற விஷயம் இல்ல.

 

 

 

 

 

  • ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்

நீ எல்லாத்திலேயும் முதன்மையா இருக்கணும் அப்படின்னு நினைக்கறதுல தப்பு இல்ல சங்கமித்ரா. அதேசமயம் சில சூழ்நிலைல, சில விஷயங்கள்ல உன்னால முதன்மையா வரமுடியாத நிலை வரலாம். அந்தமாதிரி நேரத்துல உன்னை நீயே நொந்துக்கறதோ, முதன்மையா வந்த உன்னோட friends மேல கோபம், வெறுப்பு வர்றதோ, அவங்களை பழிவாங்கும் உணர்வு உனக்கு வர்றதோ தவறான பாதை ஆயிடும். அப்போ அதை எப்படி எடுத்துக்கறது அப்படினு உனக்கு அடுத்த கேள்வி வரலாம். நீ எப்படி முதன்மையா வரணும்னு நினைக்கிறியோ அதே மாதிரிதான் உன்னச் சுத்தி இருக்கறவங்களும் நினைப்பாங்க அப்படினு ஒரு உண்மையான விஷயத்த புரிஞ்சுக்கோ. எல்லாருமே சிறப்பானவங்களா இருக்கமுடியுமே தவிர எல்லாருமே முதன்மையானவங்களா இருக்க முடியாது அப்படிங்கற இன்னொரு உண்மையையும் புரிஞ்சுக்கோ. அடுத்து நீ உன்ன மத்தவங்களோட compare பண்ணும்போதுதான் அவங்களவிட முதன்மையா இருக்கணும்னு தோணுது இல்லையா? நீ தனிப்பட்ட முறையில் மிகச் சிறப்பானவள். தனித்தன்மை வாய்ந்தவள். யாருடனும் ஒப்பிட முடியாதவள். அதேபோல்தான் எல்லாரும். யாரோடையும் ஒப்பீடு செஞ்சுகாம ஒவ்வொரு விஷயத்திலேயும் நீ சிறப்பானவளா இருக்கும் முயற்சி எடு. முதன்மையானவளா இருக்கணும்னு முயற்சி எடுத்தா பலநேரங்கள்ல நீ அழவேண்டிய சூழ்நிலை வந்துடும். வாழ்வில் சிறப்பானவளாக வாழ் வாழ்த்துகள் சங்கமித்ரா.

கேள்வி – பதில் தொடரும்… 

……………………………………………………………………………………………………………………………………………

“எங்க ஏரியா… உள்ள வாங்க”

(இது குழந்தைகளுடன் ஓர் உரையாடல்)

இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ, குழந்தைகளாகவோ இருந்தால் இதுபோன்று தங்களுக்கு எழும் கேள்விகளை எங்களுக்கு கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் மனநல ஆர்வலர் திருமிகு.ஓஷோனிக்ராஜ் அவர்கள். கேள்விகளை அனுப்ப : Email : puthuvaravunews@gmail.com / britosho@gmail.com

 

 

ஓஷோனிக்ராஜ்

மனநல ஆர்வலர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *