ஆதரவின்றி தவிக்கும் வயதான தம்பதியினரை, முதியோர் காப்பகத்தில் சேர்த்து மறுவாழ்வு அளித்திடவேண்டுமாய் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை வேண்டுகோள்

Share Button
திருப்பூர் :-
முதியோர் காப்பகம் வைத்திருப்போர், மேலே படத்தில் உள்ள 2 வயதான தம்பதியினரை தங்களின் இல்லத்தில் சேர்த்து மறுவாழ்வு அளித்திடவேண்டுமாய் திருப்பூரில் இயங்கி வருகின்ற நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை வேண்டுகோள் வைத்துள்ளது.
இன்று 11-9-2021 சனிக்கிழமை, காந்திநகரில் வசிக்கும் கீதா என்ற பெண்மணியிடமிருந்து தகவல் வந்ததின் அடிப்படையில், திருப்பூரில் கடந்த 20 ஆண்டுகாலமாக மக்கள் நல சேவையில் ஈடுபட்டு வரும் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவளர் ந.தெய்வராஜ் அவர்கள் அந்த 2 முதியவர்களான தம்பதியினரை சந்தித்துள்ளார்.
அப்போது பல துயரமான செய்திகள் அந்த முதியவர்கள் தெய்வராஜிடம் பகிர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் தெய்வராஜிடம் கேட்டபோது, மேலும் அவர் கூறியதாவது :
தமிழகத்தில் உள்ள முதியோர் காப்பகம் வைத்துள்ள யாராவது முன்வந்து இந்த 2 வயதான (முதியவர்கள்) தம்பதியினரை மறுவாழ்வு அளித்து உதவிட வேண்டுமாய் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையின் சார்பில் பணிந்து கேட்டுக்கொள்கின்றோம் என்று அந்த அமைப்பின் நிறுவனர் மற்றும் அறங்காவளர் ந.தெய்வராஜ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிர்ச்சி தகவல்
காந்திநகரில் வசிக்கும் கீதா என்ற பெண்மணி எங்களது திருப்பூர் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை அமைப்பை தொடர்பு கொண்டதின் அடிப்படையில், ந.தெய்வராஜ் அவர்களின் அமைப்பின் சார்பாக நேரில் சென்று வயதான தாத்தா பாட்டியை விசாரித்த போது நெஞ்சை பதரவைக்கும் சம்பவம் பற்றி மூதாட்டி கண்ணீர் மல்க கூறி தேம்பி தேம்பி அழுது புலம்பியுள்ளார்.
ந.தெய்வராஜ் அவர்கள் கூறிய தவல்கள்
உடன் தெய்வராஜ் ஆகிய நானும் அந்த பாட்டியை அழாதீங்க பாட்டி நானிருக்கேன் என ஆறுதல் படுத்தியதோடு விசியத்தை சொல்லுங்க என்றும் கேட்டபோது, அந்த மூதாட்டியும் விபரங்களை மேலும் சொல்லிக்கொண்டே போனார்.
இந்த மூதாட்டி பெயர் சரஸ்வதி வயது 75, கணவர் பெயர் காளியப்பன் வயது 80 என தெரிவித்தார்கள். இவர்களுக்கு பிறந்தது மகள் பழனியம்மாள், மகன் நடராஜ் ஆகியோர் உள்ளனர். சொந்த ஊர் சக்தி புலியம்பட்டி பகுதி எனவும், தாம் சொந்த ஊரைவிட்டு திருப்பூர் வந்து 40 வருடங்களுக்கு மேல் ஆகிறது என்றார் சரஸ்வதி மூதாட்டி.
பாட்டியின் அதிர்ச்சி தகவல், 10 வருடங்களுக்கு முன் தனது குடும்ப அட்டை பல்வேறு அடையாள குறிப்பு கொண்ட ஆவனம் யாவும் எங்கோ தவறவிட்டதாகவும் அதன் பின் எவ்வித அடையாளச்சான்றும் எங்களிடம் இல்லை என்பதால் எங்களுக்கான அரசு சலுகைகள் முதல் ரேசன் கடை பொருட்கள் முதலாவது வாங்க முடியாமல் வறுமைக்கு மேல் வறுமை எங்களை ஆட்டிப்படைக்குதுங்க ஐய்யா எனவும் மனவேதனையுடன் தெரிவித்தார் மூதாட்டி.
மூதாட்டியின் அடுத்தடுத்த விசயங்களை கேட்க கேட்க தெய்வராஜ் ஆகிய எங்களாலும் தாங்க முடியாத கண்ணீர் துளிகளும் கரைபுரண்டோட… பாட்டி ஒரு நிமிடம் என வெளியில் வந்து கண்ணீரைத் துடைத்து விட்டு மகன் என்னாச்சு என கேட்டோம் அதற்கு மூதாட்டி சொன்ன பதில் ஐய்யா அவன் எங்களைப் பார்த்து பல வருடங்கள் ஆகின்றது ஏதோ அப்பப்ப பல பல நம்பரில் இருந்து தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பது மட்டும் தான், மற்றப்படி எதுவும் எங்களுக்கு கொடுத்து உதவ முடியாத நிலை… மகனின் நிலையையும் விவரித்தார்.
மகள் என்ன நிலையென கேட்டால் மகளும் ஒருவிதத்தில் உடல் நிலை குன்றியதோடு திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாத குறைபாட்டில் அவர்களும் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.
பாட்டி உனது கணவர் பற்றி சொலுங்களேன். 60 ஆண்டுகாலம் வாழ்ந்த வாழ்க்கையில் எனது கணவர் காளியப்பனிடம் நான் அடி உதை வாங்கி கையில் இருந்த கொஞ்ச நஞ்ச வீடு வாசல் காசு பணம் எல்லாம் இழந்து கையும் காலும் தான் மிச்சம் ஐய்யா என உடைஞ்ச மனதோடு கூறியதை கேட்ட போது இறுதியா என்ன இந்த வயசான காலத்திலையாவது நிம்மதியா இருக்கலாம் என நினைத்ததில் அங்கேயும் எனக்கு நிம்மதி இல்லிங்களே என மனசு நொந்து தற்போது ஒருவேலை கஞ்சி காச்சிக் குடிக்கக்கூட வாழ்வாதாரம் இல்லையே நான் எங்கு போவது யாரை நம்பி இனியும் வாழ்வது என கதறினார் அந்த மூதாட்டி.
இந்த நிலையில் கணவர் கடந்த 8 மாதங்களுக்கு முன் சாலையை கடக்கும்போது திடிரென டூவிலர் வாகனம் ஒன்று கணவர் மீது மோதியதில் கணவர் இடுப்பு, குடுவை பகுதி பெருமளவி அடிப்பட்டு மருத்துவமனையில் வைத்து பாதுகாப்பளிக்க முடியாத பாவியாகவும் மகனின் உதவியும் இல்லாமல் வயதான கணவரை பராமறிக்க இயலாத சூழ்நிலையில் உள்ளோம் என புலம்பி தள்ளினார் பாட்டி.
தற்போது என்னையும் எனது கணவரையும் முதியோர் இல்லத்தில் சேர்த்து மறுவாழ்வு அளிக்க உதவி புரியுங்களேன் என வீடியோ ஒன்றிலும் கூட கண்ணீர்மல்க முறையிட்டு உள்ளார் எங்களிடம் முறையிட்டுள்ளார்.
கருணை மனம் கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் முதியோர் காப்பகம் வைத்திருப்போர் 2 நபரையும் காப்பகத்தில் சேர்த்து பராமறிப்பு வழங்கி உதவிட நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை சார்பில் பணிந்து கேட்கின்றோம் என கேட்டுக்கொண்டுள்ளார் ந.தெய்வராஜ் அவர்கள்.
மேலும் தகவலுக்கு கீழே உள்ள விவரங்களில் தொடர்பு கொள்ளுங்கள்.
ந. தெய்வராஜ், (நிறுவனர் – நிர்வாக அறங்காவளர்)
நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை.
அனுப்பர்பாளையம், திருப்பூர்.
செல்: 9442372611 /9489404911
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *